Close
செப்டம்பர் 20, 2024 5:40 காலை

வருவாய்த்துறை ஊழியர்கள் தர்னா…

புதுக்கோட்டை

கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் தர்னா போராட்டத்தில் ஈடுபட்ட வருவாய்த்துறை ஊழியர்கள்

அரசாணையை 65 -ஐ , ரத்து செய்து தற்போது வெளியாகி உள்ள அரசாணை 74 -ன் படி பதவி உயர்வு வழங்க வலியுறுத்தி புதுக்கோட்டையில் தர்னா போராட்டம் நடைபெற்றது

புதுக்கோட்டை மாவட்ட வருவாய் அலகில் கடந்த 2019 ஆம் ஆண்டு டிஎன்பிஎஸ்சி  தேர்வாணையம் மூலமாக தேர்வு செய்யப்பட்ட இளநிலை வருவாய் ஆய்வாளர் மற்றும் தட்டச்சர் ஆகியோர்களுக்கிடையே ஒருங்கிணைந்த முதுநிலை பட்டியல் படி கடந்த 11.07.2022 -ஆம் ஆண்டு பதவி உயர்வு வழங்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த 2022 -ஆம் ஆண்டு மனிதவள மேம்பாட்டு துறை மூலம் அரசாணை எண் 65, 11.07.2022 -ஆம் நாள் வெளியிடப்பட்டு இளநிலை வருவாய் ஆய்வாளர் மற்றும் தட்டச்சர் ஆகியோர்களுக்கிடையே 1 : 1 விகிதாச்சாரப்படி, திருத்திய முதுநிலை பட்டியல் தயார் செய்து அரசாணை வெளிவந்த ஒரு நாளில் பதவி உயர்வு பெற்றவர்களில் 7 நபர்களை பதவி இறக்கம் செய்து தட்டச்சர்களுக்கு பதவி உயர்வு வழங்க பட்டது.

தற்போது மனிதவள மேம்பாட்டு துறை மூலமாக அரசாணை எண் 74 வாயிலாக மேற்படி இளநிலை வருவாய் ஆய்வாளர் மற்றும் தட்டச்சர் ஆகியோர்களுக்கிடையே 1.1 விகிதாசார முறை அரசாணை ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஆனால் அரசாணை வெளியிடப்பட்டு 10 நாட்கள் பின்பும் மேற்படி முந்தைய பதவி உயர்வு பட்டியல் ரத்து செய்ய வில்லை. எனவே, அரசாணையை 65 -ஐ , ரத்து செய்து தற்போது வெளியாகி உள்ள அரசாணை 74  -ன் படி பதவி உயர்வு வழங்க வலியுறுத்தி இளநிலை வருவாய் ஆய்வாளர் கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 40 -க்கும் மேற்பட்டோர் தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top