Close
ஏப்ரல் 10, 2025 10:22 மணி

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர்

பி.எட். மாணவர்களை கொண்டு கற்பித்தலை மதிப்பீடு செய்யும் scert இயக்குனரின் உத்தரவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். தொடக்கக்கல்வி மாணவர்களுக்கான இணைய வழி தேர்வுகளை உடனடியாக கைவிட வேண்டும். உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டை திலகர் திடலில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பி.எட். மாணவர்களை கொண்டு கற்பித்தலை மதிப்பீடு செய்யும் scert இயக்குனரின் உத்தரவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். தொடக்கக்கல்வி மாணவர்களுக்கான இணைய வழி தேர்வுகளை உடனடியாக கைவிட வேண்டும்.

எமிஸ் இணையதளத்தில் தேவையற்ற பதிவுகளை நாள் தோறும் செய்யச் சொல்லி வற்புறுத்தக்கூடாது.காலை உணவு திட்டத்தை நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கும் உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் விரிவு படுத்த வேண்டும்.காலை உணவு திட்டத்தில் ஆசிரியர்களை ஈடுபடுத்த வேண்டாம்.
ஏழை எளிய மாணவர்களின் கல்வித்தரத்தை பாதிக்கின்ற எண்ணும் எழுத்தும் திட்டத்தை கைவிட வேண்டும் என்பன. உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான ஆசிரியர்கள் கலந்து கொண்டு கண்டனம் முழக்கங்கள் எழுப்பினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top