Close
நவம்பர் 22, 2024 4:33 காலை

தஞ்சை மாவட்டத்தில் 9 இடங்களில் பாத மருத்துவ மையம் : ஆட்சியர் தகவல்

தஞ்சாவூர்

தஞ்சை மாவட்ட அரசு மருத்துவமனைகளில் பாத மருத்துவ மையங்கள்

சட்டசபை கூட்டத் தொடரில்  சுகாதாரம் மற்றும் நலவாழ்வுத் துறை அமைச்சர், மாவட்ட தலைமை மருத்துவமனை கும்பகோணம் மற்றும் தஞ்சாவூர் மாவட்ட அனைத்து தாலுக்கா மருத்துவமனைகளில் ரூபாய் 105.00 இலட்சம் செலவில் நீரிழிவு நோய் மற்றும் குருதி நாள பாதிப்புகளால் ஏற்படும் கால் பாத பாதிப்புகளை கண்டறிந்து ஆரம்ப நிலை தலை யீட்டின் மூலம் கால் இழப்புகளை குறைக்கும் திட்டம் மாதிரி அடிப்படையில் செயல்படுத்தப்படும் என்று அறிவித்தார்.

அதனை அடுத்து 03.10.2022 -அன்று சுகாதாரம் மற்றும் நலவாழ்வுத்துறை அமைச்சர் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இரத்தநாள அறுவை சிகிச்சை துறையின் கீழ் பாத மருத்துவ மையத்தினை திறந்து வைத்தார்

பட்டுக்கோட்டை , பேராவூரணி, அதிராம்பட்டினம், ஆடுதுறை, திருவையாறு, பாபநாசம், அய்யம்பேட்டை , கும்பகோணம் ஆகிய அரசு மருத்துவமனைகளில் பாத மருத்துவ மையம் செயல்பட்டு வருகிறது.

கடந்த 30.03.2023 -அன்று சர்க்கரை நோயினால் ஏற்படும் பாத பாதிப்புகள் குறித்து பயிலரங்கம் தஞ்சாவூர் மாவட்ட அரசுஆரம்பசுகாதார நிலைய மருத்துவர்களுக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்றது.அதில் 77 மருத்துவ அலுவலர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது

அதனை தொடர்ந்து கடந்த11.07.2023 முதல் 31.08.2023 -9 தொகுதியாக தஞ்சாவூர் மாவட்டஅரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும்185 செவிலியர்கள், மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் பணி புரியும் 116 இடைநிலை சுகாதார செவிலியர்கள், 55 சுகாதாரஆய்வாளர்கள், 353 பெண் சுகாதார தன்னார்வலர் மற்றும்74 பகுதி சுகாதார செவிலியர்கள் ஆகியோருக்கு சர்க்கரை நோயினால் ஏற்படும் பாத பாதிப்புகள் குறித்து ஒருநாள் பயிற்சி தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அளிக்கப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் மொத்தம் 69 ஆரம்ப சுகாதார நிலையங்கள் 8 நகர்புற ஆரம்பசுகாதார நிலையங்கள் 309 துணை சுகாதார நிலையங்கள் மற்றும் 42 நகர்புற துணை சுகாதார நிலையங் களும் செயல்பட்டு வருகின்றன.

செப்டம்பர் 1ம் தேதி முதல் 30 -ஆம் தேதி வரை மாவட்டத்தில் உள்ள1,13,006 சர்க்கரை நோயாளி களுக்கு இப்பயிற்சி பெற்ற பணியாளர்கள் மூலம் துணை சுகாதார நிலைய வாரியாக பாத பரிசோதனை செய்யப்படஉள்ளது.

 மேலும், பரிசோதனை செய்யப்பட்டு பாதபாதிப்பு கண்டறியப்பட்ட சர்க்கரை நோயாளிகளுக்கு தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பாதமருத்துவ மையத்தில் மேல் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top