Close
மே 12, 2024 11:52 காலை

எஸ்சி-எஸ்டி நலத்துறையில் உள்ள தற்காலிக ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

தஞ்சாவூர்

தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையில் காலியாக உள்ள ஆசிரியர்கள் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

தஞ்சாவூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் ஆதிதிராவிடர் நலப்பள்ளி களில் பள்ளி மேலாண்மைக்குழு மூலம் தொகுப்பூதிய அடிப்படையில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர். பட்டதாரி ஆசிரியர் மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் களை தற்காலிகமாக பணி நியமனம் செய்வதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அரசாணை (ப) எண் 198 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்(ஆதிந-7) துறை. நாள்.14.08.2023ன்படி பள்ளி மேலாண் மைக்குழு மூலம் தொகுப்பூதிய அடிப்படையில், தமிழ்நாடு அரசுப்பணியாளர்கள் (பணி நிபந்தனைகள்) சட்டம் 2016 பிரிவு 19-ன்படி ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் மேல்நிலை / உயர்நிலை/ நடுநிலை மற்றும் தொடக்கப்பள்ளி களில் கல்வி பயிலும் மாணாக்கர்களின் கற்றல் கற்பித்தல் மற்றும் பொதுத்தேர்வு எழுதும் மாணாக்கர்களின் நலன் கருதி முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் / பட்டதாரி ஆசிரியர்/ இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்களை முற்றிலும் தற்காலிகமாக ஆசிரியர்கள் நிரப்பிட ஆதிதிராவிடர் நல இயக்குநரால்  அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

நிபந்தனைகள்: இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.12.000/ பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.15000/-முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.18.000/- தொகுப்புதியத்தில் மாத ஊதியம் நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது.ஆசிரியர் காலிப் பணியிடங் களை ஆசிரியர் தேர்வு வாரியம் / பதவி உயர்வு மூலம்

நிரப்பிடும் வரை அல்லது இக்கல்வியாண்டில் பள்ளி இறுதி தேர்விற்கு முந்தையமாதம் வரை இவற்றில் எது முன்னரோ அது வரையில் தற்காலிகமாக இப்பணியிடம் அனுமதிக்கப் படும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

தற்காலிகமாக நியமனம் செய்யப்படும் இடைநிலை / பட்டதாரி/ முதுகலைபட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் ஒரு இடைநிலை ஆசிரியர் மட்டுமே பணிபுரியும் (தலைமையாசி ரியர் நிலையில் காலிப்பணியிடம்) பள்ளிக்கு ஓராசிரியர் பள்ளி எனும்நிலையை தவிர்த்திட இடைநிலை ஆசிரியர் நிலையில் நியமனம் செய்யப்படும் நாள் முதல் ஏப்ரல் 2024 முடிய உள்ள மாதங்களுக்கு மட்டும் அந்தந்த ஊர்களில் பள்ளி அமைந்துள்ள பகுதி மற்றும் அருகில் உள்ள தகுதியுள்ள நபர்கள் பள்ளி மேலாண்மைக் குழு மூலம் தேர்ந்தெடுக்கப் படுவார்கள்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் 2 -முதுகலை பட்டதாரி ஆசிரியர் (English-1 Botany-1) 12- பட்டதாரி ஆசிரியர் பணியிடமும் (Tamil-2, English-4. Maths-2, Science-1,Social Science-3) 15- இடைநிலை ஆசிரியர் பணியிடமும் காலியாக உள்ளது.

தஞ்சாவூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம் மற்றும் தஞ்சாவூர், திருவையாறு, பட்டுக்கோட் டை, கும்பகோணம் ஆதிதிராவிடர் நலதனி வட்டாட்சியர் அலுவலகங்களை அனுகி காலிப் பணியிடங்களை தெரிந்து கொண்டு அந்த பணியிடங்களுக்கு மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட பாடத்திற்கான முழுமையான கல்வித் தகுதி பெற்ற நபர்கள் மட்டும் தேர்ந்தெடுக்கப்படு வார்கள்.

முதுகலை பட்டதாரி/பட்டதாரி/இடைநிலை ஆசிரியருக்கு விண்ணப்பிப்போர் வரையறுக்கப்பட்ட கல்வித் தகுதிகளுடன் ஆசிரியர் தகுதித் தேர்விலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் தன்னார்வலர்களாக பணி புரிந்து வருபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

பள்ளி மேலாண்மைக் குழு மூலம் நிரப்பப்படும் ஆசிரியர்கள் பணிபுரியும் பணியிடத்திற்கு குறிப்பிட்ட காலத்திற்குள் பதவி உயர்வு மூலமாகவோ அல்லது மாறுதல் மூலமாகவோ பணியிடம் நிரப்பப்படின் உடனடியாக பணிவிடுவிப்பு செய்யப்படுவார்கள்.

தகுதியான நபர்கள் தனது எழுத்து மூலமான விண்ணப் பத்தினை உரிய கல்வித்தகுதி சான்று ஆவணங்களுடன் நேரடியாகவோ அல்லது அஞ்சல் முலமாகவோ தஞ்சாவூர் மாவட்ட ஆதிதிரா விடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்திற்கு 08/09/2023 -க்குள் விண்ணப்பித்திடலாம் என  தஞ்சை மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top