Close
ஏப்ரல் 10, 2025 10:21 மணி

அனுமன் திருச்சபையினர் சார்பில் கிருஷ்ண ஜயந்தி  விழா

புதுக்கோட்டை

புதுக்கோட்டை ஸ்ரீ ஆஞ்சநேய மூர்த்தி சுவாமி ஆலயத்தில் அனுமன் திருச்சபையினர் சார்பில் நடைபெற்ற கிருஷ்ண ஜயந்தி விழா

புதுக்கோட்டை ஸ்ரீ ஆஞ்சநேய மூர்த்தி சுவாமி ஆலயத்தில் அனுமன் திருச்சபையினர் சார்பில் கிருஷ்ண ஜயந்தி  விழா நடைபெற்றது.
புதுக்கோட்டை  தெற்கு நான்காம் வீதி பெரிய அனுமார் கோவில் மார்க்கெட் தெருவில் அருள் பாலித்து வரும் ஸ்ரீ ஆஞ்சநேய மூர்த்தி சுவாமிஅனுமன் திருச்சபையினர் சார்பில்கிருஷ்ண  ஜயந்தி  விழா நடைபெற்றது.குழந்தைகள் ராதை கிருஷ்ணர் வேட மணிந்து வருகைதந்தனர்.

அலங்கரிக்கப்பட்ட கிருஷ்ணருக்கு சிறப்பு பூஜைகள் தீபாராதனைஆலய சிவாச்சாரியார்  மணி குருக்கள் மற்றும் திருக்கோகர்ணம் சீனிவாச குருக்கள்  தலைமையிலும்   நடந்தது.பக்தர்கள்  அனைவருக்கும்   பிரசாதம்   வழங்கப் பட்டது.

நிகழ்வில், கல்வியாளர்கள், கவிஞர் நிலவை பழனியப்பன் மற்றும் பக்தர்கள்   கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை, அனுமன் திருச்சபையினர், ஆன்மிக நெறியாளர்ஆனந்தன் தலைமையில் நிர்வாகிகள்  செய்திருந்தனர்.
விட்டோபா பெருமாள் கோயிலில் கிருஷ்ணஜயந்தி விழா
புதுக்கோட்டை
விட்டோபா பெருமாள் கோயிலில் கிருஷ்ணஜயந்தி
புதுக்கோட்டை
விட்டோபா பெருமாள் கோயிலில் நடந்த கிருஷ்ணஜயந்தி விழா
புதுக்கோட்டை வடக்கு ராஜவீதி பல்லவன் வடக்கு கரையில் உள்ள அருள்மிகு விட்டோபா பெருமாள் கோயிலில் நடைபெற்ற கிருஷ்ண ஜயந்தி விழாவில், ஏராளமான குழந்தைகள் கிருஷ்ணர் வேடமணிந்து வந்தனர்.
குழந்தைகள் அனைவருக்கும் கம்பன் கழகச்செயலர் ரா. சம்பத்குமார் பரிசளித்து வாழ்த்தினார். நிகழ்வில், கவிஞர் ச. பாரதி, அனுராதாசீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top