Close
நவம்பர் 22, 2024 11:56 காலை

தஞ்சையில் மாணவர் எழுச்சித்தமிழ் மாநாடு

தஞ்சாவூர்

தஞ்சையில் நடந்த உலகத் தமிழ் காப்புக் கூட்டியக்கம் சார்பில் மாணவர் எழுச்சித் தமிழ் மாநாட்டில் பங்கேற்ற அமைச்சர் மு.பெ. சாமிநாதன்

தஞ்சாவூர் தமிழ் பல்கலைக் கழகம் கரிகாற் சோழன் கலையரங்கில் உலகத் தமிழ் காப்புக் கூட்டியக்கம் சார்பில் மாணவர் எழுச்சித் தமிழ் மாநாடு(9.9.2023) நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு தமிழ் பல்கலைக்கழகமுன்னாள் துணைவேந்தர் முனைவர் சி சுப்பிரமணியம்  தலைமை வகித்தார். இம் மாநாட்டில் பேச்சு, கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி, தமிழ் வளர்ச்சி செய்தி, விளம்பரத் துறை அமைச்சர்  மு.பெ.சாமிநாதன் விழாப் பேருரையில் பேசியதாவது:

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் வழி நடைகொண்டு “தமிழுண்டு தமிழ் மக்களுண்டு – இன்பத் தமிழுக்கு நாளும் செய்வோம் நல்ல தொண்டு”என்ற வரிகளுக்கேற்ப தமிழ்நாடு முதலமைச்சர்  விழிவழி நடக்கும் தமிழ் துறை வளர்ச்சித் வாயிலாக தமிழ்மொழியின் தலைமுறையினருக்குக் வண்ணம் திட்டங்களைச் செயற்படுத்தி வருகிறார்.

அவரது ஆணைப்படி, பள்ளி மாணவ, திறனறித் தேர்வு நடத்தப்பெறுகிறது. மாணவியர்கள் அறிவியல், கணிதம் சார்ந்த ஒலிம்பியாட் தேர்வுகளுக்கு பெருமளவில் தயாராகி
கலந்து கொள்வதைப் போன்று தமிழ்மொழி இலக்கியத் திறனை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழில்ஆண்டுக்கு 1500 மாணவர்கள் தெரிவு செய்து அவர்களுக்கு திங்கள் தோறும் 22 திங்களுக்கு ரூபாய் 1500 – ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது.

இதற்கென தமிழ் வளர்ச்சித் துறை வாயிலாக பள்ளிக் கல்வித் துறைக்கு இரண்டரை கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படு கிறது. இந்த ஆண்டு அக்டோபர் திங்களில் தேர்வு நடத்தப்பட வுள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்திய நாட்டிற்காகப் பாடுபட்ட தலைவர்களான அண்ணல் காந்தி, பண்டித ஜவகர்லால் நேரு. அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார். பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் கருத்துகளையும் சமூகச் சிந்தனைக ளையும் இளைய தலைமுறையினர் அறிந்துகொள்ளும் வகையில் ஆண்டுதோறும் அவர்களது பிறந்த நாளில் ஆறாம் வகுப்பு முதல் கல்லூரி மாணவர்கள் வரை மாவட்ட அளவில் பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு முதல் பரிசு ரூபாய் 5,000 இரண்டாம் பரிசு ரூபாய் 3,000 -, மூன்றாம் பரிசு ரூபாய் 2,000 – எனவும், அரசுப் பள்ளி மாணவர்கள் 2 பேருக்கு சிறப்புப் பரிசாக ரூபாய் 2,000-விதம் பரிசுத் தொகை வழங்கப்பட்டு வருகின்றன.

பெரும்பாலான அலுவலகங்களில் 85 விழுக்காடு அளவில் ஆட்சிமொழித் திட்டம் செயற்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ் வளர்ச்சித் துறை வாயிலாக அரசு அலுவலகஆய்வுப் பணியோடு. வணிக நிறுவனங்களில் பெயர்ப்பலகைகள் தமிழில் உள்ளனவா எனவும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

தமிழில் பெயர் வைக்கப்படாத நிறுவனங்கள்,கடைகள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையிடம் உள்ளது. தற்போதுள்ள நடைமுறையின்படி, தமிழில் பெயர் வைக்கப்படாத நிறுவனங்கள், கடைகளுக்கு விதிக்கப்பட்டு வந்த அபராதத் தொகை ரூபாய் 50 -ஐ ரூ 2000 ஆக உயர்த்தி ஆணை வெளியிட உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது என்றார் தமிழ் வளர்ச்சி செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர்  மு.பெசாமிநாதன் .

இந்நிகழ்ச்சியில் தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் வி திருவள்ளுவன், தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர் திரு டி.கே.ஜி. நீலமேகம், மாநகராட்சி மேயர்  சன் ராமநாதன், முன்னாள் துணை வேந்தர் முனைவர் கா பாஸ்கரன், தமிழ் சங்க பேரவை தலைவர் செ.துரைசாமி, தமிழ் காப்பு கூட்டியக்க தலைவர் புலவர் கா.சா. அப்பாவு, தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் சபீர்பானு மற்றும் ஏராளமான மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top