Close
நவம்பர் 25, 2024 7:15 காலை

சீதாபதி பிள்ளையார் கோயிலில் விநாயகர் சதுர்த்தி

புதுக்கோட்டை

சிறப்பு அலங்காரத்தில் புதுகை சீதாபதி பிள்ளையார்

புதுக்கோட்டை பல்லவன் குளம் கிழக்குக்கரை பகுதியில் உள்ள சீதாபதி கிருஷ்ண விநாயகர் கோயிலில்   விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற்றது.

இதை, முன்னிட்டு ஆலயத்தில்  உள்ள    விநாயகருக்கு காலையில் கணபதி ஹோமம் மற்றும் சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு மகா தீபாரதனை நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் வருகை தந்து தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அருள் பிரசாதம் வழங்கப்பட்டது.

விநாயகர் சதுர்த்தி என்பது, சிவனடியார்களுக்குத் துன்பம் விளைவிக்கும் தீயசக்திகளை அழித்து, அவர்தம் வினைகளை நீக்கி, அருள்தரும் விநாயகப்பெருமானை ஆவணி மாத சதுர்த்தி அன்று இவ்வுலகோர் உய்ய சிவபெருமான் அருளிய நிகழ்வைக் கொண்டாடும் பண்டிகை “விநாயகர் சதுர்த்தி”ஆகும்.

புராணப்படி அரக்கர்களின் கொடுமையில் இருந்து தங்களை காத்திட தவமிருந்து, சிவபெருமானிடன் தேவர்கள் முறையிடதன் பயனாக தடைகளை தகர்த்தெறியும் ஆற்றலுடன் சிவன் பார்வதியால் உருவாக்கப்பட்டவர் தான் விநாயகப் பெருமான்.

இவர் ஒரு ஆவணி மாத சதுர்த்தியன்று யானை முகத்தோடும், மனித உடலோடும் அரக்கன் கஜமுகாசுரனை அழித்து தேவர்களை மீட்டார். எனவே, அன்று முதல் இந்த தினத்தை விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடப்பட்டு வருகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top