Close
செப்டம்பர் 20, 2024 4:10 காலை

சங்க இலக்கியங்கள்தான் வரலாற்றின் முக்கிய ஆவணங்களாகத் திகழ்கின்றன: ச.தமிழ்ச்செல்வன்

தமிழ்நாடு

புதுக்கோட்டையில் தமுஎகச சார்பில் ஐஏஎஸ் அதிகாரி ஆர்.பாலகிருஷ்ணன் எழுதிய ‘ஒரு பண்பாட்டின் பயணம் - சிந்து முதல் வைகை வரை’ என்ற நூலின் அறிமுக விழா

சங்க இலக்கியங்கள்தான் வரலாற்றின் மிக முக்கியமான ஆவணமாக திகழ்கின்ற என்றார் எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் ஐஏஎஸ் அதிகாரி ஆர்.பாலகிருஷ்ணன் எழுதிய ‘ஒரு பண்பாட்டின் பயணம் – சிந்து முதல் வைகை வரை’ என்ற நூலின் அறிமுக விழா ஞாயிற்றுக்கிழமை புதுக்கோட்டையில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வன் மேலும்  பேசியதாவது:

தமிழ்நாடுதமுஎகச சார்பில் நடந்த விழாவில் பேசுகிறார், எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வன்

சிந்துவெளிப் பண்பாட்டின் உடல்மொழி தொடங்கி செவ்வியல் இலக்கியம் வரையிலான எச்சங்களைத் தேடுவதாக இந்த நூல் அமைந்திருக்கிறது. திராவிட மொழி பேசும் மக்கள் இந்தியா முழுவதும் வாழ்ந்திருக்கின்றனர் என்பதை இந்து நூல் சான்றுகளுடன் நிறுவுகிறது.

மனிதன் இடம்பெயர்ந்ததால் மட்டுமே நாகரிகம் வளர்ந் துள்ளது. ஊர்ந்துகொண்டே இருந்ததால்தான் ஊர் எனப் பெயர் வந்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள பல ஊர்களின் பெயர்கள் வட மாநிலங்களிலும், பாகிஸ்தான், ஆப்கானிஸ் தான் உள்ளிட்ட நாடுகளிலும் உள்ளது. பிடி மண் எடுத்துவந்து புலம்பெயர்ந்த இடங்களுக்கு தாங்கள் விட்டுவந்த ஊரின் பெயரை வைத்துள்ளனர்.

சிந்துவெளியில் இருந்து ஒரு பகுதியினர் படிப்படியாக புலம்பெயர்ந்து தெற்கே வந்து சேர்ந்து இருக்கின்றனர். அங்கிருந்து வாய்மொழியாக வந்த வரலாற்றை சங்க இலக்கியம்தான் ஆவணமாக பதிவு செய்துள்ளது. வேறு எங்கும் இது பதிவு செய்யப்படவில்லை.

சங்க இலக்கியத்தில் உள்ள பல காட்சிகள் இன்றைக்கும் வட மாநிலங்களில் உள்ள நிலப்பரப்பையும், விலங்குகளையும், மக்களின் வாழ்நிலையையும், கால நிலையையும் குறிப்ப தாக உள்ளது.

சிந்து சமவெளியில் நடைபெற்ற ஆய்வுகளில் கிடைத்த கீறல்களைப் போன்றே, கீழடியிலும் ஆதிச்சநல்லூரிலும் கீறல்கள் கிடைத்திருக்கின்றன.  இதன்மூலம் திராவிட மொழி பேசும் மக்கள் இந்திய நிலப்பரப்பு முழுவதும் வாழ்ந்து இருகிக்கிறனனர் என்பதை ஆய்வாளர் தனது 30 ஆண்டுகள் கடும் உழைப்பைச் செலுத்தி நிறுவியுள்ளார்.  மறுக்க முடியாத பல உண்மைகளை இந்த நூல் தெளிவுபடுத்துகிறது.

முசோரியில் ஐஏஎஸ் பயிற்சியில் இருந்தபோது ஆய்வாளர் ஐராவதம் மகாதேவன் அங்கே உரையாற்றியிருக்கிறார். அந்த உரையைக் கேட்ட பிறகு, அவரைப் போல நாமும் ஆய்வில் ஈடுபட வேண்டும் என்று பாலகிருஷ்ணன் கண்ட கனவு இந்த நூல் மூலம் நிறைவேறியிருக்கிறது.

இந்த நூல் என்ன சொல்கிறது என்பன பற்றிய குறிப்புகளை மட்டுமே வைத்து 100 இடங்களில் ஒளிக்காட்சி வகையிலான கூட்டங்களை நடத்தத் திட்டமிடுகிறோம் என்றார் தமிழ்ச்செல்வன்.

நூலாசிரியர் ஆர்.பாலகிருஷ்ணன் தனது ஏற்புரையில், மரத்திற்கு வேர்களைப் போல மனிதனுக்கு கால்கள் முக்கியம். பயணங்கள் மூலம் மனிதன் தனது வாழ்க்கையை மேம்படுத்தியுள்ளான். பாதையைவிட பயணம் முக்கியம். பயணத்தைவிட பயணி முக்கியம்.

ஒரு மனித இனம் கடந்து வந்த வரலாற்றை சங்க இலக்கியம் பதிவு செய்திருக்கிறது. வெறுப்புணர்வு இல்லாத பொறுப்பு ணர்வோடு சங்க இலக்கியம் பேசுகிறது. கடந்த காலங்களில் பல மொழிகள் காணாமல் போய்விட்டன.

எந்தச் சூழலிலும் அழியாமல் செழித்து வளர்ந்த மொழி தமிழ். தமிழ்மொழியின் மிகச்சிறந்த கொடையாக சங்க இலக்கியம் உள்ளது. எனக்கு நானே பல முறை பரிசீலனைக்கு உட்படுத் திய பிறகுதான இந்த நூலை வெளியிட்டேன். முதலில் ஆங்கிலப் பதிப்பாக இந்த நூல் வெளி வந்ததால் சங்க இலக்கியம் உலகின் பல நாடுகளின் கவனத்தையும் ஈர்த்துள்ளது என்றார்.

விழாவிற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் ராசி.பன்னீர் செல்வம் தலைமை வகித்தார். தமுஎகசவின் மாநிலத் தலைவர் மதுக்கூர் ராமலிங்கம் வாழ்த்திப் பேசினார். மாநிலத் துணைத் தலைவர் நா.முத்துநிலவன்  தொடக்கவுரையாற்றினார்.

முன்னதாக, மாவட்டச் செயலர் எம்.ஸ்டாலின் சரவணன் வரவேற்க,  மாவட்டப் பொருளாளர் கி.ஜெயபாலன் நன்றி கூறினார். கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் ஸ்ரீரசா, ஆர்.நீலா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top