Close
நவம்பர் 25, 2024 12:53 காலை

தஞ்சையில் உலத்தமிழர் பேரமைப்பு சார்பில் தமிழர் தொன்மை வரலாற்றுச்சிறப்பு மாநாடு

தமிழ்நாடு

தஞ்சையில் நடந்த உலகத்தமிழர் பேரமைப்பு மாநாட்டில் கீழடி மாநாட்டு சுடரை க.ஆத்மநாதன், அரிக்கமேடு சுடரை வை.இரா. பாலசுப்பிரமணியன், பூம்புகார் சுடரை தங்க.இரமேசு ஆகியோர் அளித்தனர்

 உலகத்தமிழர் பேரமைப்பு பத்தாவது மாநில மாநாடு தமிழர் தொன்மை வரலாற்று சிறப்பு மாநாடாக தஞ்சாவூரில் சனிக்கிழமை நடைபெற்றது.

உலகத்தின்தொன்மை வாய்ந்த மொழிகளில் முதன்மை யானது தமிழ் மொழி ஆகும். தமிழரின் பண்பாடு கலாச்சாரம் அனைத்து மொழி, இன கலாசாரங்களுக்கும், பண்பாடுக ளுக்கும் எடுத்துக்காட்டாக, முற்போக்கானதாக இன்றளவும் விளங்குகிறது .

கீழடி, அரிக்கமேடு, பூம்புகார் உள்ளிட்ட பல்வேறு அகழ்வா ராய்ச்சி முடிவுகளும், குறிப்புகளும் சிந்து சமவெளி ,எகிப்திய நாகரிகங்களுக்கு முற்பட்டதாக வரலாற்று நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். தொன்மை மிக்க, வரலாற்று சிறப்பு வாய்ந்த தமிழ் மொழி மீது இன்றைக்கு இந்தி, சமஸ்கிருத மொழிகளின் ஆதிக்கம் அதிகமாகி தமிழ் மொழியை அழித்து நிலைக்கு கொண்டு கொண்டிருக்கிறது. தமிழரின் பண்பாடு, கலாச்சாரத்தை, வாழ்வியலை சிதைக்கிறது.

இவற்றையெல்லாம் மீட்டெடுக்கும் வகையில் தமிழரின் தொன்மை வரலாற்று சிறப்பு குறித்து உலக தமிழர் பேரமைப்பு சார்பில் பத்தாவது மாநாடு தஞ்சாவூரில்  23.9.2023 சனிக்கிழமை காலை 9 மணிக்கு தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள அண்ணா நூற்றாண்டு அரங்கத்தில் தொடங்கி நடைபெற்றது.

உலகத்தமிழர் பேரமைப்பின் துணைத் தலைவர் அயனாவரம் சி. முருகேசன் பத்தாவது மாநாட்டு கொடியினை ஏற்றி வைத்தார். காலை 10 மணிக்கு தமிழர் தொல் வரலாற்று கண்காட்சியை பேராசிரியர் த.செயராமன் திறந்து வைத்தார். கீழடி மாநாட்டு சுடரை க.ஆத்மநாதன், அரிக்கமேடு சுடரை வை.இரா. பாலசுப்பிரமணியன், பூம்புகார் சுடரை தங்க.இரமேசு ஆகியோர் அளித்தனர்.

தமிழர் பேரமைப்பின் பொதுச் செயலாளர் ந.மு தமிழ்மணி வரவேற்புரை ஆற்றினார். மாநாட்டில் முனைவர் வி.அரசு தலைமை உரை ஆற்றினார். உலகத் தமிழர் பேரமைப்பின் பத்தாவது மாநாட்டு மலரை துணைத்தலைவர் சா. ராமன் வெளியிட துணைத் தலைவர்கள் டி.சி.எஸ். தெட்சிணாமூர்த்தி, த.மணிவண்ணன், ம.பொன்னிறைவன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

வில்லியனூர் வெங்கடேசன் எழுதிய புதுச்சேரி மாநில கல்வெட்டுகளின் சொல்லடைவு என்ற நூலை தமிழர் தேசிய முன்னணி தலைவர் செ.ப.முத்தமிழ்மணி வெளியிட மு.முருகையன், இரா கோவிந்தராசு, ஏ ஐ டி யூ சி மாவட்டச் செயலாளர் துரை .மதிவாணன் பெற்றுக் கொண்டனர்.

தொல்லாய்வு தடயங்கள் நிறுவும் தமிழரின் தொன்மை என்ற தொல்லாய்வு அறிஞர்களின் குறிப்புகளை உலகத் தமிழர் பேரமைப்பின் செயலாளர் பி.வரதராசன் வெளியிட அருட்தந்தை பாலு, அ.பாண்டியராஜன், ப.சந்தானம், க.இராஜேந்திரன், சொ.அனந்தராசு, இரா. இரவி, நாக.பாலன், பேராசிரியர் இ. முத்தையா, அ. நா. சாந்தாராம், வழக்குரைஞர் ஞா.பகவத்சிங், இரா.அருள்பிரகாசம், பொறியாளர் ச.சுரேசு, நா.மு.மாரி, ஆ.முருகேசன், கவிக்குயில்கணேசன், வீ.அதிவீரபாண்டியன் பெற்றுக் கொண்டனர்.

தமிழ்நாடு
தஞ்சையில் நடந்த உலகத்தமிழர் பேரமைப்பு மாநாடு

பிற்பகல் நிகழ்ச்சியாக தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் நாட்டுப்புறவியல் துறைத் தலைவர் முனைவர்.இரா.காமராசு தலைமையில் நடைபெற்ற தொல் தமிழர் வரலாற்றுத் தொன்மை குறித்த கருத்தரங்கில் தமிழகமும்- களப்பிரர் ஆட்சியும் என்ற தலைப்பில் முனைவர் ஆ.பத்மாவதி, தமிழர் கடல் கடத்த வாணிபமும்- அரிக்கமேடும் என்ற தலைப்பில் முனைவர் பெ‌இரவிச்சந்திரன், சங்க கால முசிறி பட்டினமும்-அயலகத் தொடர்புகளும் என்ற தலைப்பில் முனைவர் வீ.செல்வகுமார், அகழ்வாராய்ச்சிகளில் தமிழ் எழுத்துக்கள் என்ற தலைப்பில் முனைவர் கோ.விசய வேணுகோபால் ஆகியோர் உரையாற்றினார்கள்.

நிகழ்வினை புலவர் கரு. அரங்கராசன் ஒருங்கிணைத்தார். மாலையில் உலகத் தமிழர் பேரமைப்பின் துணைத் தலைவர் உலகப் பெருந்தமிழர் காசி ஆனந்தன் தலைமையில் நடைபெற்ற உலக பெருந் தமிழர் விருது வழங்கும் நிகழ்வில் விருதாளர்கள்  பொறியாளர் சு.பழனி ராஜன், பேராசிரியர் சோம.கண்ணதாசன், பொன்.வைத்தியநாதன், பா.செல்ல பாண்டியன், கோ.பாபு அறிமுகம் செய்து உரையாற்றினர்.

முனைவர்கள் வீ.அரசு, ஆ.பத்மாவதி, கோ.விசயவேணு கோபால்,  க.நெடுஞ்செழியன், புலவர் செ.இராசு ஆகியோர் உலக பெருந் தமிழர் விருதினை பெற்றுக் கொண்டு ஏற்புரையாற்றினார்கள்.

முதல் நாள் மாநாட்டினை நிறைவு செய்து இலங்கை மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் உரையாற்றினார். முடிவில் உலகத்தமிழர் பேரமைப்பு செயலாளர் துரை.குபேந்திரன் நன்றி கூறினார். 24.9.2023 ஞாயிற்றுக் கிழமை இரண்டாவது நாள் மாநாடு நிகழ்ச்சி  நடைபெற்றது.

#செய்தி- தஞ்சை துரைமதிவாணன் #

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top