Close
நவம்பர் 22, 2024 4:11 காலை

உலகத் தமிழர் பேரமைப்பின் தமிழர் தொன்மை வரலாற்று சிறப்பு மாநாடு

தஞ்சாவூர்

தஞ்சையில் நடந்த உலகத்தமிழர் பேரமைப்பு மாநாடு

உலகத் தமிழர் பேரமைப்பின் தமிழர் தொன்மை வரலாற்று சிறப்பு போற்றும்  இரண்டாம் நாள் மாநாடு தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை நிறைவு பெற்றது.

தமிழரின் தொன்மை, வரலாற்று சிறப்பு,தமிழர் பண்பாடு, நாகரிகம், கலாசாரம் உள்ளிட்ட பெருமைகளை இளைய தலைமுறையினருக்கு கொண்டு செல்லும் வகையிலும், இந்தி- சமஸ்கிருத வடநாட்டு மொழிகளின் ஆதிக்கத்திலிருந்து தமிழ் மொழியினை பாதுகாக்கவும், உயர்த்திப் பிடிக்கவும் உலகத் தமிழர் பேரமைப்பின் சார்பில் உலகத் தமிழர் பத்தாவது மாநாடு தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அண்ணா நூற்றாண்டு அரங்கத்தில்  இரண்டாவது நாளாக ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது.

காலை 10 மணிக்கு மங்கள இசை மற்றும் தமிழரின் தொன்மை இசையான பறை இசையுடன் மாநாடு துவங்கியது. மாநாட்டில் வழக்கறிஞர் பானுமதி தலைமை வகித்து,தொடக்க உரையாற்றினார்.

உலகத்தமிழர் பேரமைப்பின் துணைத் தலைவர் எம்.ஜி.கே நிஜாமுதீன் ஒருங்கிணைப்பில், கொடுமணலும்- தமிழக அயலவர் தொடர்புகளும் என்ற தலைப்பில் முனைவர்சு. இராசவேலு, தொல் தமிழர் ஓவிய மரபு என்ற தலைப்பில் முனைவர் க‌த.காந்திராசன் ஆகியோர் உரையாற்றினார்கள்.

கருத்தரங்கில் இரண்டாம் நிகழ்வாக பேரமைப்பின் செயலாளர் தமிழ்த்த லட்சுமி தீனதயாளன் ஒருங்கிணைப்பில் பழம் பெரும் தமிழ் சமூகம் என்ற தலைப்பில் கணியன்பாலன், ஆதிச்சநல்லூர்- பொருநை நாகரிகம் என்ற தலைப்பில் முனைவர் தியாக சத்தியமூர்த்தி, சிந்துவெளி நாகரிகம் என்ற தலைப்பில் முனைவர் மார்க்சிய காந்தி, தமிழர் நாகரிகம் என்ற தலைப்பில் முனைவர் அமர்நாத் இராமகிருட்டிணா ஆகியோர் உரையாற்றினார்கள்.

தஞ்சாவூர்

அதை தொடர்ந்து மாலையில் உலக பெருந்தமிழர் விருது வழங்கும் நிகழ்வு நடைபெற்றது . விருதாளர் அறிமுக உரையை உலகத் தமிழர் பேரமைப்பின் நிர்வாகிகள் முனைவர்.விபாரி, பூங்குழலி , செ.க.ஆதிரை, பாரி மைந்தன், பொறியாளர் ஜோ.ஜான்கென்னடி ஆகியோர் உரையாற்ற உலகப் பெருந்தமிழர் விருதினை முனைவர்கள் க.த. காந்திராசன், நா.மார்க்சியகாந்தி, தியாக சத்தியமூர்த்தி, அமர்நாத் இராமகிருட்டிணா பெற்றுக்கொண்டு ஏற்புரை நிகழ்த்தினார்கள்.

மாநாட்டு தீர்மானங்களை பேராசிரியர் இரா. முரளிதரன் வாசித்தார். உலகத்தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் மாநாடு நிறைவு செய்து உரையாற்றிய காணொளி காட்சி வெளியிடப்பட்டது. உலகத் தமிழர் பேரவைப்பின் நிர்வாகி சதா.முத்துகிருஷ்ணன் நன்றி கூறினார். #செய்தி- தஞ்சை துரை .மதிவாணன் #.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top