Close
நவம்பர் 22, 2024 8:32 காலை

விவசாயிகள் மீது காரை ஏற்றிக் கொலை செய்த ஒன்றிய அமைச்சரை பதவி நீக்கம் செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை

விவசாயிகள் மீது காரை ஏற்றிக் கொலை செய்த ஒன்றிய அமைச்சரை பதவி நீக்கம் செய்யக் கோரி புதுக்கோட்டையில் விவசாயிகள், தொழிற்சங்கத்தினர் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விவசாயிகள் மீது காரை ஏற்றிக் கொலை செய்த ஒன்றிய அமைச்சரை பதவி நீக்கம் செய்யக் கோரி புதுக்கோட்டையில் விவசாயிகள், தொழிற்சங்கத்தினர் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் போராட்டம் நடத்திய விவசாயிகளை காரை ஏற்றி படுகொலை செய்த ஒன்றிய அமைச்சரை பதவி நீக்கம் செய்யக்கோரி புதுக்கோட்டையில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி மற்றும் அனைத்துத் தொழிற்சங்கம் சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மோடி தலைமையிலான ஒன்றிய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறக்கோரி ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் ஓராண்டு காலம் மிகப் பெரிய போராட்டம் நடைபெற்றது.

இதன் ஒருபகுதியாக உத்திரப் பிரதேச மாநிலம், லக்கிம்பூர் கேரியில் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது  கடந்த ஆண்டு அக்.3  அன்று ஒன்றிய பாஜக அமைச்சர் அஜித் மிஸ்ரா, அவரது மகன் அசிஸ் மிஸ்ரா ஆகிய இருவரும் காரை ஏற்றியதில் உடல் நசுங்கி 4 விவசாயிகள் உயிரிழந்தனர். இக்கொடூரச் செயல் புரிந்த ஒன்றிய அமைச்சர் இன்னமும் பதவியில் நீடிககிறார்.

சம்பவம் நடந்து ஓராண்டு ஆகியும் நடவடிக்கை எடுக்காத ஒன்றிய அரசைக் கண்டித்தும், ஒன்றிய அமைச்சர் அஜித் மிஸ்ராவை பதவியில் இருந்து நீக்குவதோடு, அவரை கைது செய்ய வலியுறுத்தியும், விவசாயிகளுக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரியும், சம்பத்தின் ஓராண்டு நினைவைக் கடைப்பிடுக்கும் வகையிலும் கருப்புக் கொடி ஏந்தி விவசாயிகள் நாடுமுழுவதும் செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்தினர்.

அதனொரு பகுதியாக புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஐக்கிய விவசாயிகள் முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மு.மாதவன் தலைமை வகித்தார்.

புதுக்கோட்டை
புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்

விவசாயத் தொழிலாளர் சங்க மாநில செயலாளர் எஸ்.சங்கர், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.ராமையன், தலைவர் எஸ்.பொன்னுச்சாமி, இந்திய விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் ஜி.எஸ்.தனபதி, காங்கிரஸ் விவசாயப் பிரிவு மாவட்டத் தலைவர் சேகர், விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் டி.சலோமி மற்றும் சங்க நிர்வாகிகள் கே.சுந்தர்ராஜன், கே.சண்முகம், செல்வராஜ், தண்டாயுதபாணி, கோவிந்தராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அனைத்துத் தொழிற்சங்கத்தினர்:

புதுக்கோட்டை அரசுப் போக்குவரத்துப் பணிமனை முன்பாக அனைத்துத் தொழிற்சங்கத்தின் சார்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தொமுச மாவட்டச் செயலாளர் கே.கணபதி தலைமை வகித்தார்.

தொமுச மாவட்டத் தலைவர் ஏ.ரெத்தினம், சிஐடியு மாவட்டச் செயலாளர் ஏ.ஸ்ரீதர், ஏஐடியுசி மாவட்டத் தலைவர் உ.அரசப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க நிர்வாகிகள் எம்.வேலுச்சாமி, ஏ.அடைக்கலம், கே.முகமதலிஜின்னா, எஸ்.பாலசுப்பிரமணி யன், சி.மாரிக்கண்ணு, ஆர்.மணிமாறன், ஜீவானந்தம், சிவராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top