Close
நவம்பர் 22, 2024 6:53 காலை

வெங்கடேஸ்வரா கல்வியியல் கல்லூரியில் பி.எட். மற்றும் எம்.எட் முதலாமாண்டு தொடக்க விழா

புதுக்கோட்டை

வெங்கடேஸ்லகா கல்வியியல் கல்லூரியில் நடந்தஸ முதலாண்டு வகுப்பு தொடக்க லிழா

புதுக்கோட்டை  வெங்கடேஸ்வரா கல்வியியல் கல்லூரி யில் பி.எட். மற்றும் எம்.எட்முதலாமாண்டு துவக்க விழா நடைபெற்றது.

புதுக்கோட்டை வெங்கடேஸ்வரா கல்வியியல் கல்லூரியில் பி.எட் மற்றும் எம்.எட்முதலாமாண்டு தொடக்க விழா  சிறப்பாக நடைபெற்றது. கல்லூரியின் முதல்வர் முனைவர் எம்.இளங்கோவன் அனைவரையும் வரவேற்றார்
.கல்லூரியின் செயலாளர் பி.கருப்பையா தலைமையு ரையாற்றினார். மாயனூர் ஆசிரியப் பயிற்சி நிறுவனத்தின் முன்னாள் முதல்வர் கடவூர் மணிமாறன் சிறப்பு விருந்தின ராகக் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு சீருடைகள் மற்றும் புத்தகங்கள் வழங்கினார்.
புதுக்கோட்டை
பின்னர், அவர் பேசுகையில் மாணாக்கர் என்றால் மாண்பினை ஆக்குபவர் என பொருள்.  ஆசிரியர் என்றால் குற்றங்களை களைபவர் என பொருள். கல்வி என்றால் அறிவை தோண்டுதல் என்று பொருள்.  எல்லா சொல்லும் பொருள் தரும்.
ஆசிரியர் பணி என்பது ஏணி, தோனி, கலங்கரை விளக்கு. ஆசிரியர் நினைத்தால் வானத்தையும் கடலையும் அளக்கமுடியும்.  எதிர்கால சமுதாயத்தில் கல்லாமையை நீக்கி விட முடியும்.  மங்காத மனித நேயம் ஆசிரியர் பணிக்கு மிகவும் முக்கியம் என்று ஆசிரியரின் சிறப்புகளை எடுத்துக்கூறினார்.
பொருளாளர் கவிஞர் ஆர்எம்.வீ.கதிரேசன், அறங்காவலர் கே.ராஜா, பாலிடெக்னின் கல்லூரியின் முதல்வர் எம்.ஜீவானந்தம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.உதவிப் பேராசிரியர்கள்,  மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.  உதவி ப்பேராசிரியர் எம்.திருவள்ளுவன் நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top