Close
நவம்பர் 24, 2024 10:17 மணி

அரசு வேளாண் கல்லூரிக்கு எம்.எஸ். சுவாமிநாதன் பெயர்: முதல்வருக்கு மாணவர்கள் நன்றி

தஞ்சாவூர்

வேளாண்கல்லூரிக்கு எம்.எஸ். சுவாமிநாதன் பெயரை அறிவித்த முதல்வர் ஸ்டாலின்

டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்  என்று பெயர் சூட்டிய தமிழ்நாடு முதலமைச்சருக்கு ஈச்சங்கோட்டை வேளாண்  கல்லூரி மாணவ, மாணவிகள்  நன்றி தெரிவித்தனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் சட்டப் பேரவையில். தஞ்சாவூர் மாவட்டம், ஈச்சங்கோட்டையில் உள்ள வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் என்று அழைப்பதற்கு அறிவிப்பினை முதலமைச்சர் வெளியிட்டார்.

கடந்த 11.10.2023 அன்று  நடைபெற்ற  சட்டப் பேரவையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வேளாண் விஞ்ஞானியான டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன்  இந்திய அளவில் முத்திரை பதித்து, உலகளவில் புகழ் பெற்றவர். பத்மவிபூஷண், ரமோன் மகசசே உள்ளிட்ட உயரிய விருதுகளைப் பெற்றுள்ள அவரது நினைவைப் போற்றுகிற வண்ணம் தமிழ்நாடு அரசின் சார்பில்  முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பை  வெளியிட்டார்.

இந்தஅறிவிப்பில்,  தஞ்சாவூர் மாவட்டம், ஈச்சங்கோட்டை யிலுள்ள அரசு  வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,  இனி, டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் என்று அழைக்கப்படும்.

அதேபோல், தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தில் இளம் வேளாண் அறிவியலில் பயிர்ப் பெருக்கம் மற்றும் மரபியல் பாடங்களில் அதிக மதிப்பெண் பெற்று முன்னிலை பெறும் மாணவருக்கு டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன்  பெயரில் ஆண்டு தோறும் விருது வழங்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்தார்.

தமிழ்நாடு முதலமைச்சரின் சிறப்பு வாய்ந்த அறிவிப்பை கொண்டாடும் வகையில், ஈச்சங்கோட்டை டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், கல்லூரியில் வெள்ளிக்கிழமை (13.10.2023) நடைபெற்ற நிகழ்வில்,  தஞ்சாவூர் மாவட்ட வருவாய் அலுவலர் தெ.தியாகராஜன் கலந்து கொண்டு, டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர்   கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு இனிப்புகளை  வழங்கினார்.

மேலும்,  டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் என்ற பெயரை அறிவித்த    தமிழ்நாடு முதலமைச்சருக்கு  மாணவ, மாணவிகள் நன்றிகளை தெரிவித்தனர்.

இந்நிகழ்வில் டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதன்மையர் ஏ.வேலாயுதம், வேளாண்துறை இணை இயக்குநர் நல்லமுத்துராஜா மற்றும் மாணவ, மாணவியர், கல்லூரி பேராசிரியர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top