Close
மே 20, 2024 3:54 மணி

திருக்குறள் முற்றோதல்: பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

தஞ்சாவூர்

திருக்குறல் ஓப்புவித்தல் போட்டி

தமிழ்நாடு அரசின் மானியக் கோரிக்கை அறிவிப்பின்படி தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் திருக்குறள் முற்றோதல் ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது.  2023-2024 -ஆம் ஆண்டிற்கு தஞ்சாவூர் மாவட்ட பள்ளி மாணவ / மாணவியர் களிடமிருந்து திருக்குறள் முற்றோதலுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

போட்டியில் பங்கேற்பவர்கள் 1330 திருக்குறளையும் முழுமையாக ஒப்புவிக்கும் திறன் பெற்றவர்களாக இருத்தல் வேண்டும். இயல் எண். அதிகாரம் எண். பெயர், குறள் எண் போன்றவற்றை தெரிவித்தல், அதற்கான திருக்குறளை சொல்லும் திறன் பெற்றவராக இருக்க வேண்டும். திருக்குறளின் அடைமொழிகள், சிறப்புப் பெயர்கள். சிறப்புகள் ஆகியவற்றையும் அறிந்திருக்க வேண்டும்.

திருக்குறளின் பொருளை அறிந்திருந்தால் கூடுதல் தகுதியாகக் கருதப்படும். போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்கள், திறனறி குழுவினரால் திறனாய்வு செய்து தகுதி பெற்றவர்கள் தெரிவு செய்யப்பெற்று, பரிசு பெறுவதற்கு அரசுக்குப் பரிந்துரைக்கப்படுவர். 1330 திருக்குறளையும் ஒப்புவிக்கும் மாணவர்களுக்கு திருக்குறள் முற்றோதல் பாராட்டுப் பரிசுத் தொகை ரூ.15,000/- மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவ/மாணவியர் இந்தப் போட்டியில் பங்கேற்கலாம். ஏற்கெனவே இந்தப் பரிசை பெற்றவர்கள் மீண்டும் இப்போட்டியில் பங்கேற்கக் கூடாது. போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவ / மாணவியர் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தின் 3 -ஆம் தளத்தில் இயங்கும் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பப் படிவத்தினை நேரில் பெற்றுக் கொள்ளலாம் அல்லது தமிழ் வளர்ச்சித் துறையின் வலைத் தளத்தில்  (https//tamilvalarchithrurai.tn.gov.in)  பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இது குறித்து மேலும் விவரங்களுக்கு 04362- 271530 என்ற எண்ணில் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம். விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்- 04.12.2023 ஆகும்.  பூர்த்தி  செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் அளிக்கப்பட வேண்டுமென தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர்  தீபக் ஜேக்கப்  தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top