Close
நவம்பர் 24, 2024 12:09 காலை

இடியாப்பம் தமிழர்களின் ஓர் பாரம்பரிய உணவு…

இங்கிலாந்திலிருந்து சங்கர்

இடியாப்பம்- வரலாறு

இடியாப்பம் தமிழர்களின் ஓர் பாரம்பரியமான உணவு எனலாம். தமிழகத்தில் ஒன்றாம் நூற்றாண்டின் தமிழர்களின், சமையல் முறையில் இருந்த உணவு என்பது பற்றி சங்க இலக்கியத்தில் சில குறிப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

தமிழகத்தை பிறப்பிடமாகக் கொண்ட இடியாப்பம் தமிழர்கள் இடம்பெயர்ந்த இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகளிலும் பிரபலமான உணவு.
இடியப்பம் என்பது நூடுல்ஸிற்கு சிறந்த ஒரு மாற்று.சத்தான எளிதில் செரிமானமாகக் கூடிய இந்த பதார்த்தம்.

கேரளா, தமிழ்நாடு மற்றும் இலங்கையை பூர்வீகமாக கொண்டது என்றாலும் தெற்காசிய நாடுகளின் வீடுகள் மற்றும் உணவகங்களில் பிரதான உணவாக இருக்கிறது. அந்தந்த தேசத்து மக்களின் ரசனை ருசிக்கேற்ப, பல வித பக்குவங்களில் இடியாப்பங்கள் பரிமாறப்படுகின்றன.

அப்பு – என்றால் நீர். அப்பம் என்பது நீராவி கொண்டு தயாரிக்கப்படும் உணவுகளின் பொதுப்பெயராகும். அப்பம், இடியப்பம், இடிலியப்பம்(இட்லி), தோயப்பம் (தோயை/ தோசை) ஆகிய அனைத்தும் ஆவியில் வேகவைக்கிற உணவுகளாகும்.

இழை – என்றால் கம்பியாக, இழையாக நீண்டு வருமாறு செய்தல். ஈரமாவினை உகந்த அச்சுகளின் துணையோடு, இழைகளாக இழுத்து – திரித்து / பிழியப்பட்டு நீராவியில் வேக வைத்துச் செய்யப்படுவதே இழையப்பம் எனப்படுகிறது.

இழை + அப்பம் = இழையப்பம் என்பதே இடியாப்பம் என்றழைக்கப்படுகிறது.ஆக உரலில் மாவை வைத்து அமுக்கி /தாக்கி நூலாக இறக்கப் / வீழ்த்தப்படுவதால் இதற்கு இடியாப்பம் என்று பெயர் வந்திருக்கலாம்.இழையப்பம் > இடியப்பம் >இடியாப்பம்.

இடியப்பம் சிக்கலாக இருக்குமளவிற்கு அதற்கான பெயர்காரணம் சிக்கலாக இல்லை என்பது மேற்கூறிய காரணங்கள் மூலம் அறிந்துக்கொள்ள முடிகிறது.

# இங்கிலாந்திலிருந்து சங்கர் 🎋 #

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top