Close
நவம்பர் 22, 2024 2:17 காலை

புதுக்கோட்டை மாவட்டத்தில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் நிரல் திருவிழா: ஆட்சியர் தலைமையில் பயிலரங்கம்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா

புதுக்கோட்டை மாவட்டத்தில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் நிரல் திருவிழா திட்டம் குறித்து அரசு அலுவலர்கள் மற்றும் தொழில்நிறுவனங்களுக்கு பயிற்சி பயிலரங்கம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  (10.11.2023) நடைபெற்றது.

பயிலங்கை தொடக்கி வைத்து மாவட்ட ஆட்சியர் ஐ.சா. மெர்சி ரம்யா பேசியதாவது:  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கனவு திட்டமான “நான் முதல்வன்” திட்டத்தில் மாணவர்களுக்கு திறன் பயிற்சி அளிக்கப்பட்டு வேலை வாய்ப்புகள் பெருமளவில் உருவாக்கப்பட்டு வருகின்றன.

நான் முதல்வன் திட்டத்தின் அடுத்த கட்டமாக மாணவர்களின் வேலைவாய்ப்புக்கான திறன் பயிற்சி மட்டுமல்லாமல் தொழில் முனைவோர்களாகவும் உருவாக்க  தமிழ்நாடு முதலமைச்சர்  “நிரல் திருவிழா” எனும் திட்டத்தினை தொடக்கி வைத்தார்கள்.

இத்திட்டத்தில், பொறியியல் துறையில் படிக்கின்ற மாணவர் களும், கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் படிக்கின்ற மாணவர்களும் தொழில் சார்ந்த திறன் பயிற்சி மட்டுமல்லா மல் புத்தாக்க பயிற்சியும் மேற்கொண்டு தொழில் துவங்க    (Job creators) முடியும் என்ற கண்ணோட்டத்தில் நிரல் திருவிழா தொடங்கப்பட்டுள்ளது.

தொழில் நிறுவனங்கள் மற்றும் அரசு துறைகளில் உள்ள குறைகளை கண்டறிந்து தொழில்நுட்பம் மூலம் தீர்வு காணலாம். இந்த திட்டத்தின் மூலம் பயன் பெறும் மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் மூலம் 12 புள்ளிகள் வழங்கப்படும்.

இத்திட்டத்தில் ஐ.ஐ.டி. மெட்ராஸ் மற்றும் தொழில் முனை வோர் மேம்பாட்டு புத்தாக்க நிறுவனமும் (EDII) இணைந்து மாணவர்களை தொழில் முனைவோர்களாக உருவாக்க முடியும்.

நான் முதல்வன் நிரல் திருவிழாவின் நோக்கம் மாணவ சமூகத்தினரிடையே புதுமையான எண்ணங்கள் மற்றும் ஆர்வத்தை ஏற்படுத்தி மாணவ சமூகத்தின் தரத்தை மேம்படுத்துவதுடன் தொழில் நிறுவனங்கள் மற்றும் அரசின் பலத்துறைகள் தங்களின் தொழிற்நுட்ப ரீதியான பிரச்னை களுக்கு தீர்வு காணும் வகையில் ஒரு நாள் பயிற்சிப்பட்டறை நடைபெற்று வருகிறது.

தங்களின் தொழிற்நுட்ப ரீதியான பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் இந்த http://miralthirvizha. naanmudhalvan.in வலைதளம் உருவாக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட வலைத் தளத்தில் தங்களின் பிரச்னைகளை பதிவேற்றம் செய்வது தொடர்பாக நேரடி பயிற்சி அளிப்பதற்கும், நிரல் திருவிழா வில் வலைத்தளத்தை கையாள்வது குறித்தும் இந்நாள் வரை சந்தித்த இடையூறுகளுக்கு தீர்வு காண்பதாக இப்பயிற்சிப் பட்டறை அமைய உள்ளது.

மாணவர்களிடமிருந்து புதுமையான தீர்வுகளை பெற்று, அரசுத்துறைகள் மற்றும் தொழிலகங்கள் எதிர்கொள்ளும் சவால்கள், பிரச்னைகளுக்கு தீர்வு வழங்கவுள்ளது. இத்திட்டத்தை சிறப்பாக மேற்கொள்ள ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும் என்றார் ஆட்சியர் மெர்சி ரம்யா.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குநர் எஸ்.ராமர், மாவட்ட தொழில் மையம் சு.திரிபுர சுந்தரி, தொழிற்சாலை தொழில் பாதுகாப்பு சுகாதாரம் துணை இயக்குநர் ஆர்.ராஜாஜெய்சிங், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மாநில பிரதிநிதி  ஆர்.ஓம்பிரகாஷ், மற்றும் அரசுஅலுவலர் கள் பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top