Close
மே 20, 2024 3:15 மணி

கூலி உயர்வு கோரி டாஸ்மாக் கிடங்கு சுமைப்பணித் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்ட டாஸ்மாக் கிடங்கு சுமைத் தொழிலாளர்கள்

நடந்த 3 ஆண்டுகளாக கூலி உயர்த்தப்படாததைக் கண்டித்தும், உடனடியாக கூலி உயர்வை வழங்க வலியுறுத்தியும் டாஸ்மாக் கிடங்கு சிஐடியு சுமைப்பணித் தொழிலாளர்கள்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசு மதுபானக் (டாஸ்மாக்) கிடங்கில் இருந்து மதுப்பாட்டில் அடங்கிய பெட்டிகளை வாகனங்களில் ஏற்றி, இறக்கும் சுமைப்பணித் தொழிலாளர்களுக்கு ஆண்டுதோறும் விலைவாசி உயர்வுக்கு ஏற்ப கூலியை உயர்த்தி வழங்குவது வழங்க வேண்டும்.

ஆனால், கடந்த மூன்று வருடங்களாக கூலி உயர்வு வழங்கப் படவில்லை என சம்மந்தப்பட்ட தொழிலாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், மதுவிலக்குத்துறை அமைச்சர் கூலி உயர்வு வழங்க அறிவுறுத்தியும் அதிகாரிகள் வழங்காமலும், பேச்சுவார்த்தை நடத்தாமலும் காலம் கடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

கூலி உயர்வு வழங்கப்படாததைக் கண்டித்து தமிழ்நாடு சுமைப்பணித் தொழிலாளர் சம்மேளனம், டாஸ்மாக் சுமைப்பணி ஒருங்கிணைப்புக்குழு (சிஐடியு) வருகின்ற நவ.29 -ஆம் தேதி  அன்று வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு அறைகூவல் விடுத்துள்ளது.

இந்தப் போராட்டத்தை விளக்கியும், கோரிக்கைகளை வலியுறுத்தியும் புதுக்கோட்டை மது கிடங்கு நுழைவாயிலில்   இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு டாஸ்மாக் சுமைப்பணித் தொழிலாளர் (சிஐடியு) சங்கத்தின் மாவட்டத் தலைவர் சின்னத்துரை தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி சிஐடியு மாவட்டத் தலைவர் கே.முகமதலிஜின்னா, துணைச் செயலாளர் சி.மாரிக்கண்ணு, சுமைப்பணித் தொழிலாளர் சங்க மாவட்டப் பொதுச் செயலாளர் முத்துக்குமார், டாஸ்மாக் சுமைப்பணித் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் ரெங்கராஜ் உள்ளிட்டோர் பேசினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top