Close
நவம்பர் 22, 2024 4:07 காலை

காதிபவனில் களைகட்டிய ருத்ராட்ச மாலை, துளசி மணி மாலை விற்பனை

புதுக்கோட்டை

புதுகை காதி நிலையத்தில் துளசிமணி மாலைகள் வாங்க குவிந்த பக்தர்கள்

கார்திகை மாதம் 17.11.2023 -ஆம் தேதி வெள்ளிக்கிழமை பிறக்கவுள்ள நிலையில் புதுக்கோட்டை காதிபவனில் ருத்ராட்சமாலை துளசி மணி மாலை விற்பனை களை கட்டியுள்ளது.

புதுக்கோட்டையில் கீழ ராஜ வீதியி லுள்ள காதிபவனில் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பழனிக்கு பாதயாத்திரை செல்பவர்களும் விரதம் மேற்கொள்வதற்காக துளசி மணி மாலை மற்றும் ருத்ராட்ச மாலைகளை ஐயப்ப பக்தர்கள் வாங்கிச் செல்கின்றனர்

வருகின்ற 17.11.2023 -ஆம் தேதி வெள்ளிக்கிழமை கார்த்திகை மாதம் பிறக்கிறது. கார்த்திகை முதல் நாளில் மண்டல பூஜைக்காக சபரிமலைக்குச் செல்பவர்கள் மாலை அணிந்து விரதம் மேற்கொள்கின்றனர். சபரிமலை ஐயப்ப சுவாமிக்கு விரதமிருந்து மாலை அணியும் பக்தர்கள், அதற்கான பூஜைப் பொருள்களை ஆர்வத்துடன் வாங்கி வருகின்றனர்.

கார்த்திகை முதல்நாளில் ஐயப்ப சுவாமிக்கான விரதத்தை தொடங்கும் பக்தர்கள். ஐயப்பன் கோயில் அல்லது மாரியம்மன் கோவில், முருகன் கோயில்களுக்கு, சிவன் கோயில்களுக்கு சென்று துளசி மணி மாலை அணிந்து கொள்வது வழக்கம்.

இந்நிலையில், விரதத்துக்கான பொருள்கள், பூஜை பொருள்கள் விற்பனை புதுக்கோட்டை கீழ ராஜ வீதிலுள்ள காதி பவனில் துளசி, சந்தனம், மணி மாலை ஆகியவை, கோர்க்கப்பட்டு சுவாமி உருவம் பொறித்த டாலர்கள் , வேட்டிகள் விற்பனைக்கு குவிந்துள்ளன.

இது குறித்து காதி பவன் நிர்வாகி ரமேஷ் கூறுகையில், துளசிமாலை ருத்திராட்ச மாலை மணி மாலைகள் பல்வேறு அளவுகளிலும் விற்பனைக்கு வைத்துள்ளோம். மேலும், கேரளாவிலிருந்து வரவழைக்கப்பட்ட மாலைகளில் 54 மற்றும் 108, எண்ணிக்கையில் மணிகள் இருக்கும்.

இதேபோன்று ஐயப்பன், முருகன்,உருவ டாலர்கள் மும்பை யிலிருந்து வரவழைக்கப்பட்டுள்ளன. மேலும் சிவப்பு, மஞ்சள், பச்சை, கருப்பு, நீலம், காவி போன்ற வண்ணங்களில் வேட்டிகளும் இருக்கின்றன. எங்களிடம் ஐயப்ப பக்தர்கள் பழனி பாதயாத்திரை பக்தர்ககார்த்திகை பிறப்பு முதல் நாள்ளும் வாடிக்கையாளர்கள் வாங்கி செல்கின்றனர் என்று கூறினார் .

புதுக்கோட்டை

கேரளம் மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ஆண்டு தோறும் பல்லாயிரக் கணக் கான பக்தர்கள் விரதமி ருந்து செல்கின் றனர். இதற்காக, கார்த்தி கை முதல் நாளில் மாலை அணிந்து விரதத்தை தொடங்குகின்றனர்.

ஒரு மண்டலம் விரதம் மேற்கொண்டு, மகர ஜோதியைக் காண பலரும் செல்வர். அதுவரை தினமும் காலை, மாலை வேளை களில் குளித்து சரண கோஷம் சொல்லி, ஐயப்பனை வணங்கி விரதம் மேற்கொள்கிறார்கள். சபரிமலைக்கு தமிழகத்தில் இருந்துதான் அதிகமான பக்தர்கள் செல்கின்றனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top