Close
அக்டோபர் 5, 2024 10:00 மணி

வாக்காளர் பட்டியல் மேற்பார்வையாளர்  தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆய்வு

தஞ்சாவூர்

தஞ்சாவூரில் மாவட்டத் தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் தீபக்ஜேக்கப் முன்னிலையில் நடந்த ஆய்வுக்கூட்டதில் பேசுகிறார், தஞ்சாவூர் மாவட்டத்திற்கு வாக்காளர் பட்டியல் பார்வையாளரும் வேளாண்துறையின் ஆணையருமான எல். சுப்ரமணியன்

வாக்காளர் பட்டியல் மேற்பார்வையாளர்  தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும்  சிறப்பு சுருக்க முறை திருத்தப் பணிகள்குறித்து  ஆய்வு மேற்கொண்டார்.

இந்திய தேர்தல் ஆணையத்தால் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு வாக்காளர் பட்டியல் பார்வையாளராக (Electoral Roll Observer) நியமனம் செய்யப்பட்டுள்ள வேளாண்துறையின் ஆணையர் எல். சுப்ரமணியன் தஞ்சாவூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப் பட்டு வரும் 2024 ஆம் ஆண்டிற்கான வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தப் பணிகளை   (17.11.2023 ) இரண்டாம் கட்டமாக ஆய்வு செய்தார்.

வாக்காளர் பட்டியல் பார்வையாளர் நேற்று  தஞ்சாவூர் மாவட்டஆட்சியர் அலுவல ககூட்ட அரங்கில், தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள், வாக்காளர்பதிவு அலுவலர்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் நகராட்சி மற்றும் மாநகராட்சி ஆணையர்கள் மற்றும் தொடர்புடைய இதர அலுவலர்ளுடன் சிறப்பு கருக்க முறை திருத்தப்பணி முன்னேற்றம் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் தஞ்சாவூர் மாவட்டத் தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் தீபக்ஜேக்கப், மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோர் உடன் இருந்தனர்.

ஆய்வுக்கூட்டத்தில், வாக்காளர் பட்டியல் பார்வையாளர் வாக்காளர்பதிவு அலுவலர்கள் மற்றும் தொடர்புடைய அலுவலர்களுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டது.  இந்தியதேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டுள்ள அறிவுரைகளின்படி, இறந்த வாக்காளர்களை கண்டறிந்து முன்கூட்டியே நோட்டீஸ் வெளியிட்டு ஏழுநாட்களுக்குள் அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களிடமிருந்து ஆட்சேபணை இல்லைஎன எழுத்துப் பூர்வமாக பெற்று வாக்காளர் பட்டிய லிருந்து பெயரை நீக்குவதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும்.

மேலும், வாக்காளர் பட்டியல் பார்வையாளர்  27.10.2023 முதல் 09.12.2023 வரை பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபணைகள் மீது 26.12.2023 -க்குள் நடவடிக்கை எடுத்திட அனைத்து அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டது.

மேலும், எதிர்வரும் 25.11.2023 (சனிக்கிழமை) மற்றும் 26.11.2023 (ஞாயிற்றுகிழமை) ஆகிய இரண்டு நாட்களுக்கு நடைபெற விருக்கும் தேர்தல்சிறப்பு முகாமில் தகுதியுள்ள வாக்காளர் களை விடுபடாமல் வாக்காளர் பட்டியலில் சேர்க்க முழு முயற்சியினை மேற்கொள்ள அனைத்து வாக்காளர்பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர்பதிவு அலுவலர் களிடம்  வாக்காளர் பட்டியல் மேற்பார்வையாளர்  அறிவுறுத்தினார்.

இச்சிறப்பு முகாமில் விண்ணப்பிக்க தவறிய தகுதியுள்ள வாக்களார்கள் 30.11.2023 வரை அனைத்து வாக்காளர்பதிவு அலுவலர்கள்மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர் களிடமும் படிவம் 6 பூர்த்தி செய்து வழங்கலாம் எனவும் NVSP Portal என்ற இணையதளம்மற்றும் Voters Helpline என்ற App மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவித்தார்.

 

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top