தஞ்சாவூர் மாவட்டம், சமூகநலன் மற்றும் சத்துணவுத்திட்டத்துறை, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டத்தின் கீழ் செயல்படும் பள்ளி சத்துணவு மையங்களில் 2019-2020 ஆண்டிற்கு ISO 9001-2015 தரச்சான்று வழங்குவதற்காக நான்கு பள்ளி சத்துணவு மையங்கள் தேர்வு செய்யப்பட்டன.
சேதுபாவாசத்திரம் ஒன்றியம், பூவானம் கிழக்கு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, பூதலூர் ஊராட்சி ஒன்றியம். ஆச்சாம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி, ஒரத்தநாடு ஊராட்சி ஒன்றியம், கக்கரைக்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, மற்றும் தஞ்சாவூர் மாநகராட்சி, திருமகள் உயர்நிலைப்பள்ளி ஆகிய நான்கு பள்ளிகளில் இயங்கும் சத்துணவு மையங்களுக்கு ISO 9001-2015 தரச்சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் வசம் M/s Quest Certification (P) Ltd. சென்னை நிறுவனத்தினர் வழங்கினர்.
சத்துணவு அமைப்பாளர்களிடம் ஐஎஸ்ஓ தரச்சான்று வழங்கிய ஆட்சியர் தீபக் ஜேக்கப்
இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப், அந்தந்த பள்ளி சத்துணவு அமைப்பாளர்களிடம் தொடர்புடைய ஊராட்சி ஒன்றிய மாநகராட்சி ஆணையர்கள் முன்னிலையில் ஐஎஸ்ஓ தரச்சான்றிதழ்களை வழங்கினார் . இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) ம.அன்பரசு. உதவி கணக்கு அலுவலர் (சத்துணவு) கே.கே.பாலாஜி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.