Close
நவம்பர் 22, 2024 2:10 காலை

மத்திய அரசைக் கண்டித்து ஆளுநர் மாளிகைகள் முன்பு நாடு தழுவிய காத்திருப்பு போராட்டம் : தஞ்சையில் ஆலோசனை

தஞ்சாவூர்

தஞ்சை மாவட்டத்தில் செயல்பட்டுவரும் அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் ஆலோசனை கூட்டம்

மக்கள் விரோத மோடி அரசை கண்டித்து சென்னை ஆளுநர் மாளிகை முன்பு 72 மணிநேர காத்திருப்பு போராட்டத்தில் தஞ்சை மாவட்டத்தில் இருந்து 1000 ம் பேர் பங்கேற்க முடிவு செய்யப்பட்டது.

அனைத்து தொழிற்சங்ககள் மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி ஆலோசனை கூட்டத்தில் முடிவு மக்கள் விரோத, தொழிலாளர் விரோத, விவசாயிகள் விரோத ஒன்றிய மோடி அரசை கண்டித்து மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் ஆளுநர் மாளிகைகள் முன்பு நவம்பர் 26,27,28, தேதிகளில் நாடு தழுவிய 72 மணிநேர காத்திருப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்த போராட்டத்தை முன்னெடுக்க தஞ்சை மாவட்டத்தில் செயல்பட்டுவரும் அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் ஆலோசனை கூட்டம் ஞாயிற்றுக்கிழமை  தஞ்சாவூர் மின்வாரிய தொமுச அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு ஐஎன்டியூசி மாவட்ட செயலாளர் என்.மோகன்ராஜ், ஐக்கிய விவசாயிகள் முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் என்.வி.கண்ணன் ஆகியோர் தலைமை வகித்தனர். கூட்டத்தில் தொமுச மாவட்ட செயலாளர் கு.சேவியர், ஏஐடியூசி மாவட்ட செயலாளர் ஆர்.தில்லைவனம், சிஐடியூ மாவட்ட செயலாளர். சி.ஜெயபால், ஏஐசிசிடியு மாவட்ட செயலாளர் கே.ராஜன்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ஆர்.ராமச்சந்திரன், மாவட்ட செயலாளர் சோ.பாஸ்கர், நிர்வாகி வி.கல்யாணசுந்தரம், கரும்பு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் பி.கோவிந்தராஜ், அனைத்து சங்க நிர்வாகிகள் தி.கோவிந்தராஜன், சி.பாஸ்டின், துரை. மதிவாணன், கே.டி.காளிமுத்து, பொன்.தங்கவேல், ஆர்.பி.முத்துக்குமரன், அ.ரவிச்சந்திரன், பி.ஜெயபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தஞ்சாவூர்
தஞ்சையில் நடைபெற்ற அனைத்து தொழில் சங்க ஆலோசனைக்கூட்டம்

கூட்டத்தில் வருகிற நவம்பர் 26,27,28 தேதிகளில் சென்னை ஆளுநர் மாளிகை முன்பு மக்கள் விரோத தொழிலாளர் விரோத, விவசாயிகள் விரோத ஒன்றிய மோடி அரசை கண்டித்து நடைபெறும் நாடு தழுவிய 72 மணி நேர காத்தி ருப்பு போராட்டத்தில் தஞ்சை மாவட்டத்தில் இருந்து ஆயிரம் பேர் பங்கேற்பது.

இந்த போராட்டத்தை விளக்கி வருகிற 25.11.2023 அன்று காலை 10 மணிக்கு தஞ்சாவூர் கீழவாசலில் தெருமுனை கூட்டம் தொடங்கி, கரந்தை, நிக்கல்சன் வங்கி, பழைய பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் தெருமுனை கூட்டங்கள் நடத்துவது. அன்று மாலை 4 மணிக்கு தஞ்சாவூர் ரயிலடி முன்பு மாபெரும் ஆதரவு ஆர்ப்பாட்டம் நடத்துவது எனவும் ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top