உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024 முன்னிட்டு புதுக்கோட்டையில் மாவட்ட அளவிலான கருத்தரங்கம் (20.11.2023) திங்கள்கிழமை நடைபெற்றது.
புதுக்கோட்டைஹோட்டல் சாரதா கிராண்ட் கூட்ட அரங்கில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, மாவட்ட தொழில் மையம் சார்பில், உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024 முன்னிட்டு ஆட்சியர் மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்ற , மாவட்ட அளவிலான கருத்தரங்கத்தினை, சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்துறை அமைச்சர் .எஸ்.ரகுபதி , சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர்(20.11.2023) தொடக்கி வைத்து, 2024 உலக முதலீடுகள் மாநாட்டிற்கு தற்போது புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ள முதலீட்டாளர்களிடம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தினையும், பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின்கீழ், பயனாளிகளுக்கு கடனுதவிகளுக்கான காசோலைகளையும் வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில், அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோ டிகள் திட்டம், பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர் களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், பிரதம மந்திரியின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம் ஆகிய திட்டங்களின்கீழ் ரூ.55.69 இலட்சம் மதிப்பிலான கடனுதவிகளையும் மற்றும் 2024 உலக முதலீடுகள் மாநாட்டிற்கு தற்போது புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ள முதலீட்டாளர்களிடம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தி னையும், சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்துறை அமைச்சர்.எஸ்.ரகுபதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் வழங்கினார்கள்.
தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்காக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் பொருட்டு தமிழ்நாடு அரசு வரும் ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய நாட்களில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டினை சென்னையில் நடத்த உள்ளது.
அனைவரையும் உள்ளடக்கிய நிலையான மற்றும் நீடித்த வளர்ச்சியினை நோக்கமாகக் கொண்டு 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைவதில் இம்மாநாடு முக்கிய பங்கு வகிக்கும். இவ்வுலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு முன்னோ டியாக குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவன தொழில் களில், முதலீடுகளை ஈர்க்கும் வகையில் முதலீடுகள் ஈர்க்கும் கருத்தரங்கு இன்றையதினம் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டத்திற்கு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் முதலீட்டிற்கான இலக்காக ரூ.500 கோடி நிர்ணயிக்கப்பட்டு இதுவரை ரூ.537.27 கோடிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாற்றிக் கொள்ளப்பட்டன.
இதன்மூலம் 1,780 நபர்களுக்கு வேலை வாய்ப்புகள் உருவாக வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நிலவும் தொழில் துறைக்கு உகந்த சூழல் அமைப்பு, மேம்பட்ட உள் கட்டமைப்பு, திறமை வாய்ந்த பணியாளர்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு வழங்கப்படும் முக்கியத்துவம், வணிகரீதியான வசதி வாய்ப்புகள் ஆகியவை தொழில் துறையில் முதலீடு செய்தோருக்கு சிறந்த வாய்ப்புகளை வழங்குகிறது.
விண்வெளி, தகவல் தொழில் நுட்பம், செயற்கை நுண்ணறிவு, ஆட்டோ மொபைல், மின்சார வாகனங்கள், ஜவுளி, தரவு பகுப்பாய்வு மற்றும் மேம்பட்ட பொருட்கள் உட்பட பல்வேறு துறைகள் அரசிடமிருந்து சிறப்பு கவனம் மற்றும் ஆதரவைப் பெற்று முதலீடுகளைப் பெற்றிட உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024 முக்கிய தளமாகச் செயல்படும்.
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை உலக முதலீட்டாளர்கள் மாநாடு நிகழ்வில் காட்சிப்படுத்துவதற்கும், அதன் மூலம் வாங்குபவர், விற்பனையாளர் மற்றும் பல்வேறு பங்குதாரர்களை இணைக்கும் தளமாக உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024 அமையும்.
மேலும் இம்முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்ட நிறுவனங்களுக்கு அனைத்து விதமான அனுமதிகள் மற்றும் உரிமங்கள் ஆகியவற்றை அனைத்து துறைகளிடமிருந்து விரைவாக உரிய காலத்தில் பெற்றிட ஒற்றைச்சாளர தகவு வழியாக பெற்றுத்தர மாவட்ட தொழில் மையம், புதுக்கோட்டை மூலமாக நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்நிகழ்ச்சியில், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மரு.வை.முத்துராஜா, கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னத்துரை , மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் த.ஜெயலட்சுமி, மாவட்ட தொழில்மைய பொதுமேலாளர் எஸ்.திரிபுரசுந்தரி,
புதுக்கோட்டை மாவட்ட சிறு தொழில் அதிபர்கள் நலச் சங்கத் தலைவர் சி.ராஜ்குமார், தஞ்சாவூர் கயிறு வாரிய மண்டல விரிவாக்க மைய செயலாளர்எம்.குமார ராஜா, சிட்கோ தொழிற்பேட்டை கிளை மேலாளர்பெ.குணாளன், சிப்காட் தொழிற் பூங்கா திட்ட அலுவலர் திரு.சீ.கண்ணன்,
காரைக்குடி தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழக கிளை மேலாளர் மு.எழில் பிரியா, நகரம் மற்றும் நாட்டுத் திட்டமிடல் துறை துணை இயக்குநர் அ.பிரபாகரன், தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை துணை இயக்குநர் டி.ராஜா ஜெய்சிங்,
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் கே.செல்வக்குமார், மாவட்ட தொழில் மைய உதவிப் பொறியாளர் (தொழில்கள்) பு.மதுசூதனன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்;