Close
மே 15, 2024 1:42 மணி

புதுக்கோட்டை மாவட்டத்தில் 70-ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் நடைபெற்ற 70 வது கூட்டுறவு வார விழா

புதுக்கோட்டை மாவட்டத்தில் 70-ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில்சிறந்த சங்கங்களுக்கு பாராட்டு கேடயம் மற்றும்பயனாளிகளுக்கு பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம், ஏ.டி.ஆர். திருமண மஹாலில், கூட்டுறவுத்துறையின் சார்பில், 70-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவினை, கூட்டுறவுத்துறை அமைச்சர் .கேஆர்.பெரியகருப்பன், சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி,, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர்.சிவ.வீ.மெய்யநாதன்  ஆகியோர், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் டாக்டர் என்.சுப்பையன்  மாவட்ட ஆட்சித்தலைவர் ஐ.சா.மெர்சி ரம்யா ஆகியோர் தலைமையில் இன்று (20.11.2023) தொடக்கி வைத்து, மாவட்ட அளவிலான சிறந்த சங்கங்களுக்கு பாராட்டு கேடயம் மற்றும் பயனாளிகளுக்கு பல்வேறு அரசின் நலத்திட்ட உதவிகள், கூட்டுறவு வார விழாவினை முன்னிட்டு நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி, கவிதைப் போட்டி, ஓவியப் போட்டி மற்றும் வினாடி வினாப் போட்டி உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றிபெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசுப் பொருட்களை வழங்கினார்கள்.

புதுக்கோட்டை
கூட்டுறவு வாரவிழாவில் கடனுதவி வழங்கிய அமைச்சர்கள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் 70-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில், மகளிர் சுயஉதவிக்குழுக்கடன், பயிர்க்கடன், விவசாய கூட்டுப்பொறுப்பு குழுக் கடன், கால்நடை வளர்ப்பு மூலதனக்கடன், மத்தியகாலக்கடன், மாற்றுத்திறனாளிகள் கடன், கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் கடன், சிறுவணிகக் கடன், மகளிர் தொழில்முனைவோர் கடன், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் புரிவோர் கடன், கூட்டுறவு சிக்கண நாணய சங்க கடன், தனிநபர் சம்பளக்கடன், பணிபுரியும் மகளிர் கடன், பண்ணைச் சாராக்கடன், வீடு அடமானக்கடன், வீட்டுவசதிக்கடன் உள்ளிட்ட கடனுதவிகளை கூட்டுறவுத்துறை அமைச்சர் .கேஆர்.பெரியகருப்பன், சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி ,  சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் அவர்கள் ஆகியோர் திங்கள்கிழமை வழங்கினார்கள். மேலும் கூட்டுறவு நிறுவனங்களின் தயாரிப்பு மற்றும் சேவை தொடர்பான கண்காட்சி அரங்கினையும் பார்வையிட்டனர்..

தமிழ்நாடு முதலமைச்சர் கூட்டுறவுத்துறையின் மூலம் பல்வேறு நலத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். அந்தவகையில் ஏழை, எளிய பொதுமக்களின் நலனிற்காக கூட்டுறவுத்துறையின் மூலம் கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் ஏழை, எளிய பொதுமக்களின் வாழ்க்கைத் தரம் உயர்வதற்கு வழி ஏற்படுகிறது.

மேலும் கூட்டுறவு கடன் சங்கங்கள் நமது அன்றாட வாழ்க்கையில் முக்கிய பங்காற்றி வருவதன் மூலம் பல்வேறு வகையான கடன் உதவிகள் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்டு தொழில் முனைவோர்களாக உருவாக்கி வருகிறது. கூட்டுறவு சங்கங்கள் மூலம் பெண்கள் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் மூலம் அதிக அளவில் கடன் உதவி பெற்று இந்தியாவில் முன்னோடி மாநிலமாக தமிழகம் விளங்கும் வகையில் பல்வேறு தொழில்களை மேற்கொண்டு வருகின்றனர். இதன்மூலம் நமது குடும்பமும், நாடும் பொருளாதாரத்தில் முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்கின்றனர்.

தமிழ்நாடு முதலமைச்சரால் தொடங்கப்பட்டுள்ள ‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்” மூலம் பயனாளிகளுக்கு மாதம் ரூ.1000- அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின்கீழ் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் ரூ.1000ஃ- வரவு வைக்கப்பட்டு வருகிறது. விளிம்பு நிலையில் வாழ்ந்து வரும் மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000- உறுதி செய்யும் இந்த திட்டம் மகளிரின் மனதில் மகிழ்ச்சியை மலரச் செய்துள்ளது. மேலும், அவர்களின் தேவையை பூர்த்தி செய்யும் வாய்ப்பாகவும் அமைந்துள்ளது.

மகளிரின் உயர்வுக்கு பெரும் பங்காற்றி தமிழக அரசு வழங்கி வரும் இந்த உரிமை தொகையில் மேலும் ஒரு வருமானம் பெற அதாவது ‘வரவுக்கு மீண்டும் ஒரு வட்டி” என்பது போல் சேமிக்க ஒரு சிறப்பு தொடர் இட்டு வைப்பு திட்டம் அகில இந்திய மாநில அளவிலான கூட்டுறவு வார விழாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் பெயர் ‘தமிழ்மகள்” சிறப்பு தொடர் இட்டு வைப்புத் திட்டம் புதுக்கோட்டை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் 33,645 கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கணக்குகள் உள்ளன. இதில் முதற்கட்டமாக 3,000 கணக்குகளுக்கு தொடர் இட்டு வைப்பு துவங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் சிறப்பு அம்சங்கள், இத்திட்டத்தின் மூலம் தொடர்ச்சியாக வைப்பு தொகையினை செலுத்துவதன் மூலம் மகளிரிடம் தவறாமல் சேமிக்கும் பழக்கத்தை வளர்க்க உதவுகிறது. மகளிரின் குறுகிய மற்றும் நீண்ட கால தேவைகளுக்கு இத்தொகை உதவுகிறது. இத்திட்டத்தின் மூலம் இட்டு வைப்பு திட்டத்திற்கு வழங்கப்படும் வட்டியைவிட 0.25% கூடுதலாக வட்டி 7.50% இந்த தொடர் இட்டு வைப்புத் திட்டத்திற்கு வழங்கப்படும். ஒரு மாதத்திற்கு செலுத்தப்படும் தொகை ரூ.1,000ஃ- எனில் வருட இறுதியில் அசல் வட்டியுடன் சேர்த்து ரூ.13,000-கிடைக்கும். இத்தொகை அவர்களின் குழந்தைகளின் படிப்பு செலவு, மருத்துவச் செலவு மற்றும் இதர செலவுகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

எனவே கூட்டுறவுத் துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் இதுபோன்ற பல்வேறு திட்டங்களை பொதுமக்கள் மற்றும் மகளிர் சுயஉதவிக்குழுவினர் உள்ளிட்ட அனைவரும் உரிய முறையில் பெற்று பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

இந்நிகழ்ச்சியில், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மரு.வை.முத்துராஜா, கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னத்துரை , முன்னாள் அரசு வழக்கறிஞர் கே.கே.செல்லபாண்டியன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் த.ஜெயலட்சுமி, நகர்மன்றத் தலைவர் .திலகவதி செந்தில், தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றிய கூடுதல் பதிவாளர்ஃ செயலாட்சியர் (கூ.பொ.) கூடுதல் பதிவாளர் (நிதி மற்றும் வங்கியியல்)ச.சுப்பிரமணியன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் .இராஜேந்திர பிரசாத், புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் .த.சந்திரசேகரன், கூடுதல் பதிவாளர்கள், இணைப் பதிவாளர்கள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்;

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top