Close
நவம்பர் 22, 2024 11:04 காலை

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த முகாம்: புதுக்கோட்டை மாவட்ட பார்வையாளர் ஆய்வு

புதுக்கோட்டை

நமணசமுத்திரம் பள்ளியில் பணிகளை ஆய்வு செய்த பார்வையாளர் வெங்கடாசலம். உடன் ஆட்சியர் மெர்சிரம்யா

புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெறும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்த முகாமை(2024)  வாக்காளர் பட்டியல் ஆய்வாளர் சனிக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் 01.01.2024 -ஆம் தேதியினை தகுதியான நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம், 2024-இன் சிறப்பு முகாம்கள் 25.11.2023 (சனி) மற்றும் 26.11.2023 (ஞாயிறு) ஆகிய இரண்டு நாள்கள்  நடைபெறுகிறது.

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு இந்திய தேர்தல் ஆணையத் தால் நியமிக்கப்பட்ட நில சீர்த்திருத்த ஆணையர் மற்றும் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் என்.வெங்கடாசலம்  (25.11.2023)  சனிக்கிழமை  நேரில் பார்வையிட்டார்.

அதில், கந்தர்வக்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அம்மாச்சத்திரம், நார்த்தாமலை கிராமத்திலும், விராலிமலை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தொண்டைமான்நல்லூர் கிராமத்திலும், திருமயம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட நமணசமுத்திரம் கிராமத்திலும்,

ஆலங்குடி சட்டமன்றத் தொகுதிக்குபட்ட கைக்குறிச்சி கிராமத்திலும், புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வைரம் மெட்ரிக்குலேஷன் பள்ளி மற்றும் கலைஞர் கருணாநிதி அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகியவற்றில் அமைந்துள்ள வாக்குச் சாவடிகளில் நடைபெற்று வரும் சிறப்பு சுருக்க முறைத் திருத்தம், 2024-இன் சிறப்பு முகாம்களை நேரில் பார்வையிட்டார்.

பின்னர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் வெங்கடாசலம் தலைமையில்  ஆட்சியரும், மாவட்ட தேர்தல்  அலுவலருமான மெர்சி ரம்யா முன்னிலையில் ஆய்வுக்கூட்டம்  நடைபெற்றது.

புதுக்கோட்டை
வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ஆய்வுக்கூட்டம்

இக்கூட்டத்தில், வாக்காளர் பட்டி யலில் 18 வயது நிறைவ டைந்த இளம் வாக்காளர் களை விடுப டாமல் சேர்க்க வும், இறந்த வர்கள் மற்றும் இரட்டை பதிவு கள் வாக்கா ளர்களை வாக் காளர் பட்டிய லில் நீக்கம் செய்ய ஏதுவாக அதற்குரிய படிவங்கள் பெற்று உரிய முறையில் விசாரணை மேற் கொண்டு முடிவு செய்திட வாக்குச் சாவடி நிலை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

மேலும், இந்த சிறப்பு சுருக்க முறை திருத்தம், 2024 தொடர்பாக நடைபெறும் சிறப்பு முகாம்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம் மற்றும் நீக்குதல் போன்ற பணிகளை வாக்காளர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு புதுக்கோட்டை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதி நிதிகள், வாக்காளர் பதிவு அலுவலர், உதவி வாக்காளர் பதிவு அலுவலர், மண்டல அலுவலர்கள் மற்றும் தேர்தல் தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top