சிவகங்கை அரசு அருங்காட்சியகம் சிவகங்கை தொல் நடைக்குழு சிவகங்கை மன்னர் மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றம் இணைந்து நடத்திய உலகப் பாரம்பரிய வார விழா கொண்டாட்டத்தில் தொன்மை பொருட்கள் கண்காட்சி நடைபெற்றது.
சிவகங்கை மன்னர் மேல்நிலைப் பள்ளியில் இருந்து 1600 மாணவர்கள் மற்றும் மருதுபாண்டியர் பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு பள்ளிகளில் இருந்து வந்து மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், தொல்லியல் ஆய்வாளர்கள் , பொதுமக்கள் தொன்மை பொருட்களை கண்டு அதிசயித்தனர்.
சிவகங்கை தொல்நடை குழு நிறுவனர் புலவர் கா. காளிராசா, தலைவர் தலைமையாசிரியர் நா. சுந்தராசன், தேசிய நல்லாசிரியர் செ. கண்ணன், புதுக்கோட்டை- சிவகங்கை அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் தி.பக்கிரிசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்,
கண்காட்சி ஏற்பாடுகளை புதுகை கவிஞர் பீர்முகமது, எழுத்தாளர் புதுகை சஞ்சீவி மற்றும் ராமச்சந்திரன், கண்காட்சிக்கு பழமையான புகைப்பட கருவியை வழங்கிய கவிஞர் கவிபாலா உள்ளிட்டோர் செய்திருந்தனர்