Close
அக்டோபர் 5, 2024 10:27 மணி

தஞ்சாவூர் பெரிய கோயிலில் ஆடைக் கட்டுப்பாடு: இடதுசாரிகள் பொதுமேடை கண்டனம்

தஞ்சாவூர்

தஞ்சை பெரியகோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஆடைக்கட்டுப்பாடு

தஞ்சாவூர் பெரிய கோயிலில் இந்து சமய அறநிலைத்துறை ஆடை கட்டுப்பாடு அறிவிப்புக்கு இடதுசாரிகள் பொதுமேடை கண்டனம் தெரிவித்துள்ளது.

தஞ்சாவூர் பெரிய கோயில் தமிழ்நாடு மட்டுமல்லாது இந்தியாவிலும், சர்வதேச அளவிலும் புகழ்பெற்ற உலகின் மிகப்பெரிய கோயிலாகும்.இது கோயில் என்பதைவிட தமிழர்களின் தொன்மை, கலாசாரம், பண்பாடு, சிற்பம், ஓவியம் , கட்டிடக்கலை உள்ளிட்ட பல்வேறு கலைகளின் நுணுக்கங்களையும், ஆட்சி முறைகளையும் வெளிப்படுத் துகின்ற, தமிழ்நாட்டிற்கு தமிழர்களுக்கு பெருமை சேர்க்கின்ற வரலாற்று புத்தகம் ஆவணமாக விளங்குகின்றது.

பெரிய கோயில் பற்றி அறிந்து நாட்டின் பல பகுதியில் உள்ளவர்கள் மற்றும் உலக நாடுகளின் அனைத்து மக்களும் வருகை தருகின்றனர். இவர்களின் வருகையால் நமது கலாசாரம் பண்பாடு பற்றியும் ,உலக நாடுகளில் மக்கள் தெரிந்து கொள்ளவும்,

அதே சமயம் தமிழ்நாட்டிற்கும், இந்திய நாட்டிற்கும் அன்னியச் செலவானியை ஈட்டி தருகின்ற கோயிலாகவும் இருந்து வருகின்றது. அவரவர் பண்பாடு கலாசாரத்திற்கு ஏற்றவகையில் இதுநாள் வரை பெரிய கோயிலுக்கு வந்து சென்று கொண்டிருக்கின்றனர்.

தற்போது இந்து சமய அறநிலைத்துறை சார்பாக வெளியிடப் பட்டுள்ள ஆடை கட்டுப்பாடு குறித்த அறிக்கை வெளிநாடு களில் இருந்து வருகின்றவர்களுக்கு மிகப்பெரிய சங்கடத்தை ஏற்படுத்தும். மாநிலத்தின் மற்ற பகுதிகளில் கோயிலுக்குள் நுழைய ஆடை கட்டுப்பாடு குறித்த மனுதர்ம அடிப்படை யிலான மரபின் வெளிப்பாடு என்பதுடன் , தஞ்சாவூரில் பெரிய கோயிலில் ஆடை கட்டுப்பாடு என்பதையும் இடதுசாரிகள் பொது மேடை சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம் .

இந்து சமய அறநிலை பின்புலத்தில் சநாதனம் வெளிப்படு வதாக தெரிகிறது. உடனடியாக இந்து சமய அறநிலைத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள ஆடை கட்டுப்பாடு குறித்து அறிக்கையை திரும்ப பெற வேண்டும். பெரிய கோவில் என்பது இதுநாள் வரை யாருக்கும் எவ்வித இடையூறும் இல்லாத வகையில் அனைவரும் சுதந்திரமாக ,பண்பாடு கலாசாரத்திற்கு எந்த வித பங்கமுமின்றி அவரவர் கலாசார ஆடைகளுடன் வந்து செல்கின்றனர்.

இதில் எந்த தவறும் இல்லை என்பதை இடதுசாரிகள் பொது மேடை சுட்டிக்காட்டுகிறது. அறிக்கையின்படி கட்டுப்பாடுகள் தொடர்ந்தால் மிகப்பெரிய போராட்டத்தை அனைத்து கட்சிகள் மற்றும் இயக்கங்கள் அமைப்புகள் சார்பில் பெரிய கோயில் முன்பு இணைந்து நடத்தப்படும் என  இடதுசாரிகள் பொது மேடை  ஒருங்கிணைப்பாளர்  துரை.மதிவாணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top