Close
நவம்பர் 22, 2024 4:23 மணி

மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம்

தஞ்சாவூர்

தஞ்சாவூரில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் முகாம்

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத் திறனாளிகள் சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்டஆட்சித் தலைவர்   தீபக் ஜேக்கப் தலைமையில் இன்று (30.11.2023) நடைபெற்றது.

மாவட்ட ஆட்சித் தலைவர்  தெரிவித்ததாவது: தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டு மனை பட்டா மாற்றுத் திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள், மூன்று சக்கர வாகனம், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய  85மனுக்கள் பெறப் பட்டுள்ளது. பெறப்பட்ட மனுக்களை விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இக்குறை தீர்க்கும் கூட்டத்தில் மனுக்கள் மீது மேற்கொள்ளப் படும் நடவடிக்கை குறித்த விவரத்தை உடனடியாக மனுதார ருக்கு தெரிவிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத் தப்பட்டுள்ளது என்றும் மாவட்டஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப்   தெரிவித்தார்.

பின்னர் மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சார்பில் தலா ரூபாய் 17,000;இயற்கை மரணம் அடைந்த 12 பயனாளிக ளுக்கும், முதுகு தண்டு வடம் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளி ரூபாய் 1,06,000 மதிப்பிலான பேட்டரியால் இயங்கும் சக்க ரநாற்காலி 1 பயனாளிக்கும் மற்றும் ரூபாய் 9500 மதிப்பிலான மூன்று சக்கர வாகனம் 1 பயனாளிக்கும் ஆக மொத்தம் ரூபாய் 3,19,500மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்டஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப்  வழங்கினார்.

இக்கூட்டத்தில் தனித் துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்)  எஸ்.சங்கர், மாற்றுத் திறனாளி நலத்துறை அலுவலர் வ.சீனிவாசன் மற்றும் அனைத்து அரசுதுறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top