Close
நவம்பர் 25, 2024 4:18 மணி

அரசு உயர்நிலைப் பள்ளியில் பெண் குழந்தைகள் விழிப்புணர்வு

புதுக்கோட்டை

வெள்ளாள விடுதி அரசு உயர்நிலைப் பள்ளியில் பெண் குழந்தைகள் விழிப்புணர்வு நிகழ்ச்சி

கந்தர்வகோட்டை ஒன்றியம் வெள்ளாள விடுதி அரசு உயர்நிலைப் பள்ளியில் பெண் குழந்தைகள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

தொந்தரவு கோட்டை அருகே அமைந்துள்ள வெள்ளாள விடுதி அரசு உயர்நிலைப் பள்ளியில் நேற்று கந்தர்வகோட்டை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் மூலமாக  முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர், முத்தமிழ் அறிஞர் டாக்டர்கலைஞர்  நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வளர் இளம் பெண்களுக்கு கல்வி மற்றும் சுய பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி தலைமை ஆசிரியர் பொறுப்பு மு.முத்துக்குமார் தலைமையில் நடைபெற்றது.

இதில் கலைஞரின் பேனா உருவம் கலைஞர் 100 உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்டு, அதுபற்றியும் விளக்கி கூறப்பட்டன. எட்டாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு மாணவிகள் வரை அனைவரும் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் வளர் இளம் பெண்கள் அடையும் உளவியல், உடலியல் மாற்றங்கள் குறித்தும் விழிப்புணர்வு தரப்பட்டன.

இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கந்தர்வகோட்டை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ரேவதி பெண் குழந்தைகள் ஆரோக்கியமாக வளர வேண்டியதன் அவசியம் குறித்தும், உடல் வளர்ச்சியில் நாம் கவனிக்க வேண்டிய இன்றியமையாத மாற்றங்கள் குறித்தும் பேசினார்.

இதில் திட்ட மேற்பார்வையாளர் ஜெயந்தி, அறிவியல் இயக்க மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் அறிவொளி கருப்பையா, ராஜா, கந்தர்வகோட்டை இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப் பாளர் ரகமதுல்லா ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர் கள், ஆசிரியர்கள், மாணவியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முன்னதாகஆசிரியர் பரிமளா வரவேற்றார். நிறைவாக ஆசிரியை ரஷ்யா நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top