யார் தவறு செய்தாலும் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள் அல்லது சட்டத்திற்கு முன்னால் நிறுத்தப்படுவார்கள் என்பதற்கு அமலாக்கத்துறை லஞ்சம் வாங்கிய சம்பவம் ஒரு எடுத்துக்காட்டு.
யார் தவறு செய்தாலும் எவ்வளவு பெரிய பதவியில் இருந்து தவறு செய்தாலும் அவர்களை கையும் களவுமாக பிடித்து சட்டத்திற்கு முன் நிறுத்தி உள்ளது தமிழக முதல்வருக்கு துணிச்சல் உள்ளது என்பதை காட்டுகிறது.
தொடர்ந்து என் மீது ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு உள்ளதாக கூறி வந்தார். இந்த நிலையில் தற்போது இந்த வழக்கில் நான் விடுதலை செய்யப்பட்துடன், என்னுடைய வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதற்கு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு நன்றி.
தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை தமிழாக்கத்துறை மீது அதிகாரி மீது தொடரப்பட்ட வழக்கு சிபிஐயிடம் ஒப்படைப்பதா..? அல்லது தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிப்பதா..? என்பதை முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்வார்.இவ்வாறு அமைச்சர் ரகுபதி கூறினார்