Close
மே 18, 2024 9:02 காலை

ஆலங்குடி தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ-ராஜசேகரன் காலமானார்

புதுக்கோட்டை

ஆலங்குடி தொகுதி முன்னாள் எம்எஸ்ஏ ராஜசேகரன்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் நிர்வாகியும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான  எஸ்.ராஜசேகரன் (82) உடல் நலக்குறைவால் புதன்கிழமை காலமானார். இறுதிச்சடங்கு நல்லடக்கம் வியாழக்கிழமை (01.02.2024) நடைபெறுகிறது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலும் 60 ஆண்டுகளுக்கு மேலாக பொது வாழ்க்கையில் ஈடுபட்டவர். ஆலங்குடி தொகுதியின் முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் நிர்வாகி  எஸ்.ராஜசேகரன் அவர்கள் உடல் நலக்குறைவால் புதன்கிழமை காலமானார்.
தோழர் எஸ்.ராஜசேகரன் ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக் குழு உறுப்பினராக செயல்பட்டவர். புதுக்கோட்டை மாவட்டம் பிரிந்த பிறகு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு உறுப்பினர், மாவட்ட துணைச் செயலாளர் என பல்வேறு நிலைகளில் பணியாற்றி நான்கு முறை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளராக திறம்பட பணியாற்றியவர். விவசாயிகளுக்காக, தொழிலாளர்களுக்காக எண்ணற்ற போராட்டங்களை தலைமையேற்று நடத்தியவர்.
இரண்டு முறை புதுக்கோட்டை மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினராகவும் கடந்த 2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரை ஆலங்குடி தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராகவும் மக்களால் தேர்வு செய்யப்பட்டு மிகச் சிறந்த மக்கள் பிரதிநிதியாக பணியாற்றினார்.
கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த அவர் மாவட்ட செயற்குழு உறுப்பினராக பல ஆண்டுகாலம் பணியாற்றி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வளர்ச்சிக்கும், புதுக்கோட்டை மாவட்ட உழைப்பாளி வர்க்கத் திற்கும் மிகச்சிறந்த மக்கள் தலைவராக பணியாற்றினார்.
கடந்த சில வருடங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த எஸ்.ராஜசேகரன், உடல் நலம் தீவிரமாக பாதிக்கப்பட்ட நிலையில் புதுக்கோட்டை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி புதன்கிழமை காலமானார்.
தோழர் எஸ் ராஜசேகரனுக்கு அமராவதி என்ற மனைவி மற்றும் ஜீவானந்தம் என்ற மகனும், கல்பனா என்ற மகளும் உள்ளனர்.
தோழர் எஸ்.ராஜசேகரன் உடல் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா, குலமங்கலம் வடக்கு கிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து நடைபெறுகிறது. தொடர்புக்கு.. 95856 77336.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top