தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழுமம் சார்பில் www.thanjavurtourism.org தஞ்சாவூர் சுற்றுலா இணையதளத்தில் தஞ்சாவூர் அருங்காட்சியகத்தின் 360 டிகிரி மெய்நிகர் பார்வை தொகுப்பினை தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப் தொடங்கி வைத்தார்.
இந்தத் தொகுப்பு மிகவும் நேர்த்தியாகவும் அழகாகவும் உருவாக்கப்பட்டுள்ளது எனவும், தஞ்சை அருங்காட்சிய கத்தின் சிறப்புகளை இந்த மெய்நிகர் பார்வை மெருகூட்டி இருக்கிறது எனவும் அனைவரும் இணையதளத்தில் இதனை பார்த்து மகிழலாம்.
தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழுமத்தின் சமூக ஊடக தொடர்புகளை துவங்கி வைத்து அதன் வாயிலாக தஞ்சாவூ ரின் சிறப்புகளை போற்றும் வகையில் புகைப்பட போட்டி ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டியில் பங்கேற்க விரும்புபவர்கள் @ttpcthanjavur எந்த குறியீடுடன் உள்ள சமூக ஊடகங்களின் வாயிலாக தங்கள் பதிவுகளை செய்யலாம்.
இப்போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசு ரூபாய் 10,000/-, இரண்டாம் பரிசு ரூபாய் 5000/- மற்றும் சிறப்பு பரிசுகள் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 9489155765, 7305023074 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர்தெரிவித்தார்.
தொடர்ந்து, உலக பாரம்பரிய வாரத்தை முன்னிட்டு நடைபெற்ற பேச்சு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசுத்தொகையினை வழங்கினார்.
முதல் பரிசுத் தொகை ரூபாய் 3000/- லிட்டில் ஸ்காலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் பாசில் யூசுப், இரண்டாம் பரிசு தொகை ரூபாய் 2000/- மார்னிங் ஸ்டார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் வீரராகவன் மற்றும் மூன்றாம் பரிசு தொகை ரூபாய் 1000/- சடையார் கோயில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி மோனிஷா ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் வளர்ச்சி ஸ்ரீகாந்த், மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், சுற்றுலா அலுவலர் நெல்சன், தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழும ஒருங்கிணைப் பாளர் முத்துக்குமார், இணையதள வடிவமைப்பாளர்கள் ஸ்டீபன் மற்றும் பிரவீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.