Close
அக்டோபர் 5, 2024 10:32 மணி

புதுக்கோட்டையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தத்தின் கீழ் பெறப்பட்ட  மனுக்கள் மீது ஆட்சியர் கள ஆய்வு 

புதுக்கோட்டை

வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்த விண்ணப்பஙI்களை கள ஆய்வு செய்தார் ஆட்சியர் மெர்சி ரம்யா

புதுக்கோட்டை நகராட்சிப் பகுதிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தத்தின் கீழ் பெறப்பட்ட  மனுக்கள் மீது  களஆய்வு நடைபெற்றது.

புதுக்கோட்டை நகராட்சிப் பகுதிகளில், வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தின்கீழ் பெறப்பட்ட மனுக்கள் மீது, மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா  (14.12.2023) களஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் மாவட்ட ஆட்சியர்  தெரிவித்ததாவது: புதுக்கோட்டை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு முறை சுருக்கத் திருத்தம்- 2024க்கான (Special Summary Revision – SSR) ஒருங்கிணைக்கப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் (Integrated Draft Roll) 27.10.2023 அன்று வெளியிடப்பட்டது.

அதன்படி, சிறப்பு முறை சுருக்கத் திருத்தம் 2024-இன் தொடர்ச்சியாக, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் ஃ நீக்கம் ஃ திருத்தம் தொடர்பான மனுக்கள் 27.10.2023 முதல் 09.12.2023 வரை பெறப்பட்டது. இந்த சிறப்பு முகாம்களில் படிவம் -6 வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்காக 26,758 மனுக்களும், படிவம் -7 வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் செய்வதற்காக 4,681 மனுக்களும், படிவம் -8 வாக்காளர் பட்டியலில் பெயர் மற்றும் முகவரி மாற்றம் செய்வதற்காக 10,324 மனுக்களும் என மொத்தம் 41,763 மனுக்கள் பெறப்பட்டன.

மேலும் சிறப்பு முறை சுருக்கத் திருத்தம் 2024-க்கான காலத் தில் (27.10.2023 முதல் 09.12.2023 வரை) பெறப்பட்ட படிவங்களில் 01.01.2024 தேதியை தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்ட  படிவங்கள் (6, 7 மற்றும் 8) பரிசீலனை செய்யப்பட்டு இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

அதனைத்தொடர்ந்து, இம்மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து கலீப் நகர், சாந்தநாதபுரம் மற்றும் அடப்பன்வயல் இறைவன் நகர் ஆகிய பகுதிகளில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது, புதுக்கோட்டை வருவாய் கோட்டாட் சியர் முருகேசன், வட்டாட்சியர் கவியரசன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top