இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் அமைந்துள்ள மின்னணு வாக்குப்பதிவு பாதுகாப்பு வைப்பறையில் முதல் நிலை சோதனை முடிவுற்ற மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் (3277 Ballot Unit, 2106 Control Unit, 2390 VVPAT) லிருந்து பயிற்சி மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்து வதற்காக (15.12.2023) அன்று மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் அமைந்துள்ள மின்னணு வாக்குப்பதிவு பாதுகாப்பு வைப்பறையை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் மாவட்ட ஆட்சித் தலைவரால் திறக்கப்பட்டு 6 சதவீத மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங் களான 94 Ballot Unit, 94 Control Unit 94 VVPATs எடுக்கப்பட்டது.
இவைபுதுக்கோட்டை, அறந்தாங்கி, இலுப்பூர் ஆகிய வருவாய் கோட்ட அலுவலகங்களிலும், கந்தர்வகோட்டை, திருமயம் மற்றும் ஆலங்குடி ஆகிய வட்டாட்சியர் அலுவலகங்களிலும் பாதுகாப்பாக வைக்கும் பொருட்டு அனுப்பி வைக்கப்பட்டது.
மேலும், 18.12.2023 அன்று முதல் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம், புதுக்கோட்டை, அறந்தாங்கி, விராலிமலை ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு வருவாய் கோட்ட அலுவலகத்திலும், கந்தர்வகோட்டை, ஆலங்குடி, திருமயம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு வட்டாட்சியர் அலுவலகத்திலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயிற்சி மற்றும் விழிப்புணர்வு மையம் செயல்பட உள்ளது.
இந்த பயிற்சி மற்றும் விழிப்புணர்வினை அனைத்து வாக்காளர்களும் பயன்படுத்திக் கொள்ளுமாறு புதுக்கோட்டை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் மெர்சி ரம்யா தெரிவித்தார்.
இந்நிகழ்வில், தனி வட்டாட்சியர் (தேர்தல்) அ.சோனை கருப்பையா, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.