Close
மே 20, 2024 2:39 மணி

புதுக்கோட்டையில் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் கள ஆய்வு

புதுக்கோட்டை

வாக்காளர் சுருக்க திருத்த பணிகளை ஆய்வு செய்த பார்வையாளர் வெங்கடாசலம். உடன் ஆட்சியர் மெர்சிரம்யா

புதுக்கோட்டை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்கள் மீது நில சீர்த்திருத்த ஆணையர் மற்றும் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் என்.வெங்கடாசலம்,புதுக்கோட்டை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா முன்னிலையில் கள ஆய்வு மேற்கொண்டார்.

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில், கந்தர்வகோட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கோவிலூர் மருத்துவ நகர், பழைய கந்தர்வகோட்டை கிராமத்திலும், புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சார்லஸ் நகரிலும், விராலிமலை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட இலுப்பூர் கிராமத்திலும், வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தின் கீழ் பெறப்பட்ட படிவம் 6, 7 மற்றும் 8 ஆகியவற்றை தணிக்கை (Super Checking) செய்யும் பணிகளை, நில சீர்த்திருத்த ஆணையர் மற்றும் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் என்.வெங்கடாசலம், புதுக்கோட்டை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஐ.சா.மெர்சி ரம்யா  முன்னிலையில்  (16.12.2023) கள ஆய்வு மேற் கொண்டார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு முறை சுருக்கத் திருத்தம்- 2024க்கான (Special Summary Revision – SSR) ஒருங்கிணைக்கப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் (Integrated Draft Roll)  27.10.2023 அன்று வெளியிடப்பட்டது.

அதன்படி, சிறப்பு முறை சுருக்கத் திருத்தம் 2024-இன் தொடர்ச்சியாக, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் தொடர்பான மனுக்கள் 27.10.2023 முதல் 09.12.2023 வரை பெறப்பட்டது.

இந்த சிறப்பு முகாம்களில் படிவம் -6 வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்காக 26,758 மனுக்களும், படிவம் -7 வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் செய்வதற்காக 4,681 மனுக்களும், படிவம் -8 வாக்காளர் பட்டியலில் பெயர் மற்றும்முகவரி மாற்றம் செய்வதற்காக 10,324 மனுக்களும் என மொத்தம் 41,763 மனுக்கள் பெறப்பட்டன.

மேலும் சிறப்பு முறை சுருக்கத் திருத்தம் 2024-க்கான காலத்தில் பெறப்பட்ட படிவங்களில் 01.01.2024னை தகுதி ஏற்படுத்தும் நாளாகக் கொண்ட(QualifyingDate)  படிவங்கள் (6, 7 மற்றும் 8) பரிசீலனை செய்யப்பட்டு இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

அதன் பொருட்டு, மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள தேர்தல் பிரிவில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம், 2024-இன் சிறப்பு முகாம்களில் பெறப்பட்ட படிவங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணிகளை, நில சீர்த்திருத்த ஆணையர் மற்றும் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் என்.வெங்கடாசலம், புதுக்கோட்டை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா  முன்னிலையில் நேரில் பார்வையிட்டார்.

இந்நிகழ்வுகளின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், புதுக்கோட்டை நகராட்சி ஆணையர்  ஷியாமளா, தனி வட்டாட்சியர் (தேர்தல்) அ.சோனை கருப்பையா, வட்டாட்சியர் கவியரசன், வாக்காளர் பதிவு அலுவலர்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர் கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top