Close
நவம்பர் 24, 2024 12:47 காலை

தேசிய கூடோ போட்டியில் பதக்கம் வென்ற கோபி மாணவர்களுக்கு பாராட்டு

ஈரோடு

கோபி பேருந்து நிலையத்தில் பெற்றோர்கள் மற்றும் மாணவர்களும் பொன்னாடை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்

குஜராத் மாநிலம் சூரத்தில் 14வது தேசிய கூடோ (ஜப்பனீஸ் மிக்ஸ்டு காம்பட் ஸ்போர்ட்ஸ் ) போட்டி நவம்பர் 22 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை நடைபெற்றது.

இதில், டெல்லி ,ஜம்மு காஷ்மீர் சத்தீஸ்கர் , கோவா, பாண்டிச்சேரி, கர்நாடகா தெலுங்கானா, ஆந்திரா உள்ளிட்ட 32 மாநிலங்களில் இருந்து 3000-க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் பங்கேற்றனர்.

இதில் தமிழகத்திலிருந்து எட்டு மாணவர்கள் கலந்து கொண்டனர். குறிப்பாக ஈரோடு, நாமக்கல், திருச்சி , தூத்துக்குடி  ஆகிய மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர்.

அதில் ஈரோடு யுவா மார்ஷியல் ஆர்ட் அகாடமி மாணவர்கள் நந்தினி ஸ்ரீகாந்த், கோபி வட்டம் ஆகியோரும், ஈரோடு அரசு சாமிநாதபுரம்புதூர் நடுநிலைப்பள்ளி மாணவன் எம். சந்தோஷ் மற்றும் பிகேபி. சாமி மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவன் எஸ் நிஷ்னத் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் பிகேபி. சாமி மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவன் எஸ்ய நிஷ்னத்14 வயதிற்கு உட்பட்டோர்- 39 கிலோ எடைபிரிவில் வெண்கல பதக்கத்தையும் ,

யுவா மார்சியல் ஆர்ட்ஸ் அகாடமி மாணவி எஸ். நந்தினி 19 வயது முதல் 21 வயது வரை உள்ள மைனஸ் 220 பிரிவில் வெண்கல பதக்கத்தையும் வென்றனர். கலந்து கொண்ட மற்றும் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு எஸ். ஏ. சிவசுப்பிரமணியம்,  ஜி, ஈஸ்வரமூர்த்தி, பழ.முரளி சந்திரன், பிரவீன், எழுமாத்தூர்பிரகாஷ்,

மொடக்குறிச்சி அதிமுக இளைஞரணி பாசறை ஒன்றிய தலைவர்  மஞ்சள் மாரிமுத்து, அதிமுக பிரமுகர் ஆர் கார்த்திக்,மற்றும் சாமிநாதபுரம் புதூர் தலைமை ஆசிரியர்  சாந்தி  ஆகியோர், வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு வாழ்த்துகளை பாராட்டுகளையும் தெரிவித்தனர்.

கோபிவட்ட பயிற்சிளர்  கே. செங்கோட்டையன் மற்றும் ஈரோடு மாவட்ட குடோ விளையாட்டு சங்க செயலாளர் பி சுரேஷ் ஆகியோர் அணியினை வழி நடத்திச் சென்றனர்.

வெற்றிப் பதக்கத்துடன் ஊர் திரும்பிய வீரர்களுக்கு, கோபி பேருந்து நிலையத்தில் பெற்றோர்களும் மாணவர்களும் பொன்னாடை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top