Close
நவம்பர் 22, 2024 12:39 காலை

ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா

புதுக்கோட்டை

வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் இயேசு பிரான் அவதரித்த நாளை கொண்டாடும் விதமாக கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.

கடந்த ஒரு வார காலமாக பள்ளி வளாத்தில் அமைக்கப் பட்டுள்ள கிறிஸ்துமஸ் மரம்  வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது. அதிலே  நட்சத்திரங்களே கூட்டமாக தரையிறங்கியதுபோல்  தோன்றிய அற்புதக் காட்சியை பெற்றோர்களும் மாணவர்களும் வியப்புடன் கண்டுகளித்தனர்.

கிறிஸ்துமஸ்  தாத்தா எனும் சான்டாகிளாஸ் ஒவ்வொரு வகுப்பறைக்கும் சென்று மாணவச் செல்வங்களுக்கு இனிப்புகள் வழங்கி கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு  வாழ்த்துகளை  தெரிவித்தார்.மாணவர்கள் சான்டாகிளாஸ் தாத்தாவோடு கைகுலுக்கி இனிப்புகளை பெற்று மகிழ்ந்தனர்.

புதுக்கோட்டை
கிறிஸ்துமஸ் தாத்தாவுடன் கைகுலுக்கும் குழந்தைகள்

பள்ளியின் மேலாண்மை இயக்குனர் நிவேதிதா மூர்த்தி விழாவில் கலந்து கொண்டு பள்ளியில் பணியாற்றும் கிறிஸ்தவ ஆசிரியர்களுக்கும், குழந்தைகளுக்கும் இனிப்புகள்  வழங்கிய தோடு குழந்தைகளிடம் கிறிஸ்துமஸ் செய்திகளை பகிர்ந்து கொண்டார்.

அவர் பேசும்போது  கருணையே வடிவான இயேசுபிரான்  அவதரித்த தினத்தை பள்ளிகளில் கொண்டாடுவது என்பது ஒட்டுமொத்த மனித குலத்துக்குமான செய்தியாகிய அன்பு கருணை, ஒழுக்கம், சக உயிர்களை நேசித்தல் ஆகிய பண்புகளை குழந்தைகளின் பிஞ்சு உள்ளங்களுக்கு உணர்த்துவதேயாகும்.

இயேசுபிரானின் அன்புக் கட்டளைகளுள் ஒன்றான  உன்னிடத் தில் நீ அன்பு கூறுவதுபோல பிறனிடத்திலும் அன்பு கூறுவா யாக (மத்.22.39) என்கின்ற கருத்தை மாணவர்கள் மனதில் ஏற்றி சக மாணவர்களிடம் அன்புசெலுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.

விழாவில் துணைமுதல்வர் குமாரவேல், தமிழாசிரியர்  உதயகுமார், ஆசிரியர்கள் ஜெயசுதா, கோகிலா  பவுலின், ஷெரின் ஷோபனா, லீமாரோஸ் பிரபாகர், உஷா செபஸ்டினா, மற்றும் ஆசிரியப் பெருமக்கள் கலந்து கொண்டு கிறிஸ்துமஸ் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top