புதுக்கோட்டை புதிய பேருந்துநிலையம் அருகிலுள்ள ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்ட முகாம் நடைபெற்றது.
பள்ளித் தலைமை ஆசிரியர் ர. தமிழரசி நாட்டு நலப்பணித் திட்ட முகாமை தொடக்கி வைத்தார். 23.12.2023 முதல் 29.12.2023 வரை நடைபெறும் முகாமை ஒருங்கிணைப்பாளர் சிவமணிமேகலை தலைமையில் மாணவிகள் பல்வேறு பணிகளை மேற்கொண்டனர்.
முதல்நாளில் பள்ளி வளாகத்தில் தூய்மைப் பணிகளை மேற்கொண்டனர். இதையடுத்து புதன்கிழமை பள்ளியின் அருகே உள்ள ராஜகணபதி கோயில் சுற்றுப்புறத்தை தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டனர்.இதைத்தொடர்ந்து வியாழக்கிழமை மாவட்ட நூலக வளாகத்தில் தூய்மைப் பணியை மேற்கொண்டனர். இதையடுத்து காரைக்குடி அருகே உள்ள செட்டிநாடு அரண்மனையை நேரில் சென்று பார்த்து பாரம்பரிய கட்டடக்கலை பற்றி அறிந்து கொள்ள நாட்டுநலத்திட்ட மாணவிகள் செல்கின்றனர்.
முகாமில், முதுகலை ஆசிரியர்கள் க.ரமாதேவி, ம.ரேவதி மற்றும் நாட்டுநலப்பணித்திட்ட மாணவிகள் பங்கேற்றனர்.
நாட்டு நலப்பணித்திட்டம் என்றால் என்ன ?
இளைஞர்கள் வெறும் ஏட்டுக் கல்வியோடு நின்று விடாமல், சமூகத் தொண்டாற்றவும் வேண்டும் என்பதற்காக நாட்டு நலப்பணித் திட்டம் (என்.எஸ்.எஸ்.) பள்ளி, கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது.
நாட்டு நலப்பணித் திட்டம் (என்.எஸ்.எஸ்.) முதன்முதலாக 1969-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 24-ஆம் நாள் கல்லூரிகளில் தொடங்கப்பட்டது. அதன்பின்னர், இந்த அமைப்பின் வெற்றிகரமான செயல்பாடுகள் காரணமாக, 1980-ஆம் ஆண்டு மேல்நிலைப் பள்ளிகளுக்கும் இது விரிவுபடுத்தப் பட்டுத் தற்போது சுமார் 20 லட்சத்துக்கும்அதிகமானமாணவத் தொண்டர்களைக் கொண்ட, மாபெரும் இயக்கமாக மாறியுள்ளது..
என்.எஸ்.எஸ். அமைப்பின் மூலக்கருத்து “எனக்கல்ல உனக்காக” என்பதாகும். தன்னலமின்றி பொதுநோக்கத் துக்காக பணிகள் திட்டமிடப்பட்டு நடைபெறவேண்டும் என்பதனை வலியுறுத்துவதற்காகவே “”எனக்கல்ல உனக்காக” என்கிற குறிக்கோள் நிறுவப்பட்டுள்ளது.சமுதாய சேவை மூலம் மாணவர்களது ஆளுமைத் திறனை வளர்ப்பதே என்.எஸ்.எஸ். திட்டத்தின் நோக்கமாகும்.
ஒரிசாவிலுள்ள கோனார்க் சூரியனார் கோயிலிலுள்ள தேர்ச் சக்கரத்தைத் தன்னுடைய சின்னமாகக் கொண்டுள்ளது. இந்த சக்கரத்திலுள்ள 8 ஆரங்கள் 8 நாழிகைக்கான அதாவது 24 மணி நேரமும் சமூகப் பணியாற்றத் தயார் நிலையில் இருப்பதை உணர்த்துகிறது.
சக்கரம் சின்னமாக அமைக்கப்பட்டதற்கான காரணம், இடைவிடாத தொடர் செயல்பாடுகள் மூலம் சமூக முன்னேற்றத்துக்கும் நலிவுற்றோர் மேம்பாட்டுக்கும் பாடுபடவேண்டும் என்பதாகும். என்.எஸ்.எஸ். அமைப்பின் சின்னம் சிவப்பு மற்றும் வான்வெளி நீலம் ஆகிய நிறங்களை உள்ளடக்கியது.
சிவப்பு நிறம், என்.எஸ்.எஸ். அமைப்பில் ஈடுபடுபவர்கள் இளைஞர்கள், துடிப்புமிக்கவர்கள், எவ்விதமான பணியையும் சவாலாக ஏற்று துடிப்புடன் திறம்படச் செய்து முடிப்பவர்கள் என்பதையும், வான்வெளி நீல நிறம் இந்த பரந்து விரிந்துள்ள உலகில் என்.எஸ்.எஸ். என்பது ஒரு சிறு துளி என்பதற்காகவும், சிறுதுளியாக இருந்தாலும் அளவிடற்கரிய செயல்பாடுகளி னால், எண்ணிலடங்கா சாதனைகளை, சமூக மாற்றங்களை ஏற்படுத்திட முடியும் என்பதையும் குறிப்பிடுகின்றன.
என்.எஸ்.எஸ். அமைப்பின் செயல்பாடுகளைத் தொடர் பணிகள் எனவும், 7 நாட்கள் சிறப்பு முகாம் எனவும் இரு வகைப்படுத்தப்பட்டுள்ளது.
பள்ளி, கல்லூரி வளாகங்கள், வளாகங்களை ஒட்டியுள்ள பகுதிகளில் ஆண்டு முழுவதும் மேற்கொள்ளும் பணிகள் தொடர்பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.ஆண்டுக்கொரு முறை 7 நாட்களுக்கு ஒரு கிராமத்தைத் தத்தெடுத்து, அந்த கிராமத்திலேயே தங்கியிருந்து, அனைத்து நலப்பணிகளிலும் மாணவர்கள் ஈடுபடுவதை 7 நாள் சிறப்பு முகாம் எனப்படு கிறது.
இந்தியாவிலேயே நாட்டுநலப் பணித் திட்டச் செயல்பாடு களில் தமிழகம்தான் தொடர்ந்து முன்னிலையிலும் முதன்மை யாகவும் இருந்து வருகிறது என்பது பெருமைப்படத்தக்க செய்தி ஆகும்.
ரத்தாதானம் வழங்குகின்றவர்களின் எண்ணிக்கையில் 90 % என்.எஸ்.எஸ். மாணவர்கள் என்பது இவ்வமைப்புக்குக் கிடைத்த மற்றொரு பெருமைக்குரிய செய்தி. சுனாமி, வெள்ளம் போன்ற இயற்கை இடர்களாகட்டும், மகாமகம், கோவில் திருவிழா, பண்டிகை கால செயற்கை நெருக்கடிக ளாகட்டும், நேரம் காலம் தவறாமல், ஊன் உறக்கமின்றி பலன் எதிர்பாராது கடமையாற்றும் துடிப்பும் அக்கறையும் கொண்ட வர்கள் என்.எஸ்.எஸ். மாணவர்கள் என்றால் மிகையில்லை.
மரம் வளர்ப்பு, சாலை சீரமைப்பு, சமுதாயத் தூய்மை, எழுத்த றிவுத் திட்டங்கள், வழிபாட்டுத் தல உழவாரப் பணிகள், விழிப்புணர்வுப் பணிகள், இலவச மருத்துவ முகாம்கள், புத்தக வங்கித் திட்டம், பழைய ஆடைகள் சேகரித்தல், சிறுசேமிப்புத் திட்டம் என என்.எஸ்.எஸ். மாணவர்கள் பல்வேறு பணிகளில் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றனர்.
பிறருக்கு உதவும் மனப்பாங்கு, மனிதநேயம், குழு மனப்பான் மை, மதநல்லிணக்கம், சமூக அக்கறை, விரைந்து செயலாற்று கின்ற திறன், முடிவெடுக்கும் திறன், பிரச்னைகளுக்குத் தீர்வு காணுதல் போன்ற பல்வேறு நற்பண்புகளையும் நல்ல பழக்க வழக்கங்களையும் நாளும் வளர்த்து நல்லகுடிமக்க ளாக்கும் சிறந்ததொரு பயிற்சிப் பாசறைதான் இந்த என்.எஸ்.எஸ். திட்டம் என்றால் அது மிகையாகாது.
தொண்டாற்றிய மாணவர்களுக்கு வழங்கப்படும் சான்றி தழ்கள் மாணவர்களது மேற்படிப்புக்கும் வேலைவாய்ப்புக்கும் உதவுகிறது.இந்த சேவைப் பணியில் இன்னும் பல மாணவ, மாணவிகள் இணைந்து சமூகத் தொண்டாற்ற வேண்டும் என்பதே முக்கிய குறிக்கோளாகும்.