Close
நவம்பர் 22, 2024 4:24 காலை

சுற்றுச்சூழல் பாதிப்புகளால் விவசாயத்தில் ஏற்படும் பாதிப்புகளை சமாளிப்பது எப்படி

புதுக்கோட்டை

புஷ்கரம் வேளாண் கல்லூரி-எம்எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிலையம் இணைந்து நடத்திய தேசிய மாநாட்டை தொடக்கி வைக்கிறார், திமுக எம்பி. அப்துல்லா

புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரியும் தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து நடத்திய “சுற்றுச்சூழல் பாதிப்புகளால் விவசாய உற்பத்தியில் ஏற்படும் பிரச்னை களை எவ்வாறு சமாளிப்பது” என்பது குறித்த ஒன்பதாவது தேசிய மாநாடு புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.

நிகழ்விற்கு எம் எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன முதன்மை விஞ்ஞானி ஆர் ராஜ்குமார் தலைமை வகித்தார். பாராளுமன்ற உறுப்பினர் எம் முகமது அப்துல்லா, தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் வி. திருவள்ளுவன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

புதுக்கோட்டை

தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட தலைவர் எம் .வீரமுத்து மாநாட்டை வாழ்த்தி பேசினார். பல்வேறு வேளாண்மை கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் இருந்து சுற்றுச்சூழல் பாதிப்புகள் எவ்வாறு விவசாயத்தை பாதிக்கின்றது, இந்த பாதிப்புகளை எவ்வாறு எதிர்கொள்ள முடியும் என்பது பற்றிய 120 ஆராய்ச்சி கட்டுரைகள் மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்டது.

புதுக்கோட்டை

ஈச்சங்கோட்டை, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக , டாக்டர் எம் எஸ் சுவாமிநாதன் வேளாண்மை மற்றும் ஆராய்ச்சி நிறுவன முதல்வர் ஏ. வேலாயுதம் மாநாட்டு நிறைவுறையாற்றினார்.

மாநாட்டிற்கான ஏற்பாடுகளை கல்லூரியின்  செயலாளர் ராஜாராம் செய்திருந்தார். கல்லூரி முதல்வர் எஸ். ரகுராமன் அனைவரையும் வரவேற்றார். மாநாட்டு அமைப்பு செயலாளர் எஸ். செல்வ அன்பரசு நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top