Close
நவம்பர் 22, 2024 6:17 காலை

வெள்ளாளவிடுதி அரசுப்பள்ளியில் மாணவர்களுக்கு சீருடை, புத்தகங்கள் வழங்கல்

புதுக்கோட்டை

வெள்ளாளவிடுதி அரசு உயர்நிலைப்பள்ளியில் பள்ளி திறந்த முதல் நாளில் மாணவர்களுக்கு சீருடை, புத்தகங்கள் வழங்கப்பட்டது

வெள்ளாளவிடுதி அரசு உயர்நிலைப்பள்ளியில் பள்ளி திறந்த முதல் நாளில் மாணவர்களுக்கு சீருடை, புத்தகங்கள் மற்றும் பாடக் குறிப்பேடுகள் வழங்கப்பட்டன.

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியம், வெள்ளாளவிடுதி அரசு உயர்நிலைப் பள்ளியில் அரையாண்டு தேர்வுகள் மற்றும் இரண்டாம் பருவ தேர்வுகள் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு கடந்த டிசம்பர் 22 முதல் 26 வரை நடைபெற்றது.

இதனை ஒட்டி கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறை யோடு இணைத்து தேர்வு விடுமுறையாக 10 நாள்கள் பள்ளி களுக்கு தமிழக அரசு விடுமுறையாக அறிவித்திருந்தது. இவ்விடுமுறைக்கு பின்னர் செவ்வாய்க்கிழமை(2.1.2024) தமிழகம் முழுவதும் மீண்டும் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டது.

இந்நிலையில் பள்ளி திறந்த முதல் நாளில் 6 முதல் 8 வகுப்பு மாணவர்களுக்கு மூன்றாம் பருவத்திற்கான தமிழக அரசின் விலையில்லா பாடநூல்கள், வண்ண சீருடைகளும், 6 முதல் 10 வகுப்புகளுக்கு பாட குறிப்பேடுகளும் பள்ளி திறந்த அன்றே வழங்கப்பட்டது.

இதை மாணவர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடனும், உற்சாகத் தோடும் பெற்றுச்சென்றனர். இத்தோடு தொடர்ந்து பள்ளிக ளில் 14 வகையான நலத்திட்டங்களை வழங்கி வரும் தமிழக அரசிற்கும், முதல்வருக்கும் மாணவர்கள் நன்றி தெரிவித் தனர்.

இந்நிகழ்விற்கு தலைமை ஆசிரியர் (பொறுப்பு) முத்துக்குமார் தலைமை வகித்து பேசியதாவது:

மாணவர்கள் அனைவரும் இக்கல்வி ஆண்டில் சிறப்பாக படித்து அதிக மதிப்பெண்கள் பெற்று பள்ளிக்கும், பெற்றோ ருக்கும், ஊருக்கும் பெருமை சேர்க்க வேண்டும் எனவும் தேசிய வருவாய் வழி படிப்பு உதவித்தொகை தேர்விற்கு விண்ணப்பித்துள்ள எட்டாம் வகுப்பு மாணவர்கள் தினந் தோறும் படித்து தேர்வில் சிறப்பிடம் பெற வேண்டும் எனவும் அறிவுரை கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்வில் இல்லம் தேடிக் கல்வித் திட்ட ஒன்றிய ஒருங்கி ணைப்பாளர் அ.ரகமதுல்லா, பள்ளி ஆசிரியர்கள் யோவேல், சரவணமூர்த்தி, சத்தியபாமா, ஜஸ்டின் திரவியம், நிர்மலா, பள்ளி மேலாண்மைக்குழு ஆசிரியர் பாரதிராஜா, முன்னாள் மாணவர் சக்திமணிகண்டன், இல்லம் தேடிக் கல்வி தன்னார் வலர் ரசியா, உதவியாளர் சுரேஷ், பயிற்சி ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top