Close
நவம்பர் 24, 2024 10:39 மணி

வேலை நிறுத்தப்போராட்டத்தை விளக்கி பொதுமக்களிடம் பிரசாரம்

தஞ்சாவூர்

வேலை நிறுத்தத்தை விளக்கி பொதுமக்களிடம் துண்டறி்க்கை விநியோகிக்கும் தொழில் சங்கத்தினர்

அரசு போக்குவரத்து கழகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டுமென வலியுறுத்தி  நடைபெறும் வேலை நிறுத்தத்தை விளக்கி பொதுமக்களிடம் பட்டுக்கோட்டை பேராவூரணி ஒரத்தநாடு ஆகிய மூன்று இடங்களில் போக்குவரத்து கூட்டமைப்பு சார்பில்   பிரசாரம் நடத்தப்பட்டது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஓட்டுனர்,நடத்துனர், தொழில்நுட்ப பணியாளர் உள்ளிட்ட காலிப் பணியிடங்களில் நேரடி நியமனம் மூலம் உடனடியாக ஆட்கள் நியமிக்கப்பட வேண்டும். நிறுத்தப்பட்ட அனைத்து பேருந்துகளையும் 100% சதவீதம் இயக்க வேண்டும். தொழிலாளர்களின் 15 வது ஊதிய ஒப்பந்தம் பேசி முடித்து 1.9.2023 முதல் சம்பள உயர்வு அறிவிக்கப்பட வேண்டும்.

ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் 102 மாதகால அகவிலைப்படி உயர்வு நிறைவுத்தொகையுடன் வழங்க வேண்டும், போக்கு வரத்து கழகங்களின் கூடுதல் செலவினங்களை அரசு உடனுக்குடன் வழங்க வேண்டும்.

2016 ஆம் ஆண்டு வாரிசு பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர் களுக்கு பணி நியமன ஆணையை உடனடியாக வழங்க வேண்டும். திமுக தேர்தல் கால வாக்குறுதி அடிப்படையில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.

போக்குவரத்து பென்சனை அரசு ஏற்று நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் வேலை நிறுத்தத்தை பொதுமக்களிடமும், பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளிடமும் துண்டறிக்கை விநியோகித்து பிரசாரம்  மேற்கொள்ளப்பட்டது.

தஞ்சாவூர்
பொதுமக்களிடம் துண்டறிக்கை விநியோகம் செய்த நிர்வாகிகள்

பேராவூரணியில் 10 மணிக்கு சிஜடியூ தலைவர்கள் ரகு ஆகியோரும் மதியம் 12 மணி அளவில் பட்டுக்கோட்டையில் ஹென்றி ஆரோக்கியதாஸ் ஆகியோரும், 2 மணி அளவில் ஒரத்தநாட்டில் முருகேசன் தலைமையிலும் பிரசாரம் மேற்கொண்டனர்.

பிரசார இயக்கத்தில் ஏஐடியூசி சம்மேளனத்தின் துணைத் தலைவர் துரை.மதிவாணன், நிர்வாகி எம்.ஆர்.வீரையன், சிஐடியூ பொருளாளர் எஸ்.ராமசாமி, நிர்வாகிகள் பட்டுக் கோட்டை எம்.முத்துக்குமரன், ஆர்.இராஜேந்திரன், பேராவூரணி முருகானந்தம், நவநீதன்.

ஒரத்தநாடு பால்கோவு, ரிவா சங்க நிர்வாகிகள்என்.பாஸ்கரன், ராஜேந்திரன், கோவிந்தராஜ், கும்பகோணம் ஓய்வு பெற்றோர் நலச்சங்க நிர்வாகிகள் முருகானந்தம், காசிராஜன், தாமஸ், ரெகுநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top