Close
நவம்பர் 21, 2024 11:05 மணி

புதுக்கோட்டையில்  இலவச சித்த மருத்துவ முகாம் மற்றும் மூலிகை கண்காட்சி

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் நடைபெற்ற சித்த மருத்துவ முகாமை பார்வையிடுகிரார், ஆட்சியர் மெர்சிரம்யா

புதுக்கோட்டையில்  மாபெரும் இலவச சித்த மருத்துவ முகாம் மற்றும் மூலிகை கண்காட்சி புதன்கிழமை நடைபெற்றது.

புதுக்கோட்டை அரசு தலைமை மருத்துவமனையில், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை சார்பில், 7- ஆவது தேசிய சித்த மருத்துவ தினத்தினை முன்னிட்டு நடைபெற்ற மாபெரும் இலவச சித்த மருத்துவ முகாமினை, மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா (03.01.2024) தொடக்கி வைத்து, அங்கு அமைக்கப்பட்டுள்ள மூலிகை கண்காட்சியினை பார்வையிட்டார்.

பின்னர் மாவட்ட ஆட்சியர் கூறியதாவது: பொதுமக்களின் நலனிற்காக மருத்துவத்துறையில் பல்வேறு சிறப்பான திட்டங்களை தமிழ்நாடு முதலமைச்சர் செயல்படுத்தி வருகிறார்.

அந்தவகையில் சித்த மருத்துவத்தின் அவசியத்தை பொது மக்களிடையே கொண்டு சேர்க்கும் வகையில், மாபெரும் இலவச சித்த மருத்துவ முகாம் மற்றும் மூலிகை கண்காட்சி புதுக்கோட்டை அரசு தலைமை மருத்துவ  மனையில் நடத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம் மனிதர்களுக்கு ஏற்படும் பல்வேறு நோய்களை சித்த மருத்துவத்தின் மூலமாகவும் சிகிச்சை அளித்திடும் வகையில் சித்த மருத்துவத்துறை மேம்பாடு அடைந்துள்ளது.

மேலும், பழங்காலத்தில் ஏற்பட்ட நோய்களுக்கு மூலிகை சிகிச்சையின் மூலமாகவே சரிசெய்யப்பட்டு வந்தது. அதனைத் தொடர்ந்து, தற்பொழுது ஆங்கில மருத்துவ முறையிலான சிகிச்சைகள் பொதுமக்களிடையே பயன் பாட்டில் இருந்து வரும் நிலையில், சித்த மருத்துவ முறையின் மீதும் பொதுமக்களுக்கு ஆர்வம் இருந்து வருகிறது.

எனவே பொதுமக்கள் அனைவரும் இந்த மாபெரும் இலவச சித்த மருத்துவ முகாமினை பயன்படுத்திக்கொண்டு நோயற்ற நல்வாழ்வு வாழ வேண்டும். மேலும் இந்த மூலிகை கண்காட்சியில் காட்சிப் படுத்தப்பட்டுள்ள மூலிகை தாவரங் களின் பயன்களை அறிந்து கொண்டு உரிய முறையில் பயன் படுத்திக் கொள்ள வேண்டும் என ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா தெரிவித்தார்.

இந்நிகழ்வில், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மரு.வை.முத்துராஜா, நகர்மன்றத் தலைவர் திலகவதி செந்தில், மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் மரு.எம்.வனஜா, இணை இயக்குநர் (சுகாதாரம் மற்றும் ஊரக நலப்பணிகள்) மரு.ஸ்ரீபிரியா தேன்மொழி, துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) (புதுக்கோட்டை) மரு.ராம்கணேஷ், வட்டாட்சியர் கவியரசன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top