Close
மே 18, 2024 11:13 காலை

மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகளுக்கு தகுதிச் சான்று வழங்கும் பணி தொடக்கம்

மதுரை

ஜல்லிக்கட்டுக்காளைகளுக்கு மருத்துவபரிசோதனை முகாம் தொடக்கம்

மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகளுக்கு தகுதிச் சான்று வழங்கும் பணி தொடங்கியது.

மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகளுக்கு தகுதிச் சான்று வழங்கும் பணி தொடங்கியது. கால்நடைத்துறை சார்பில் புகைப்பட அடையாளச் சான்றுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியானது.

கால்நடைத்துறை சார்பில் வெளியான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து காளைகளை பரிசோதனை செய்ய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மாடு திமில் தெரியும் வகையில் மாட்டின் உரிமையாளர், உதவியாளர் புகைப்படத்தை விண்ணப்பத் துடன் தர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில், புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு, பாலமேடு ஜல்லிக்கட்டு, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு ஆகியவற்றில் ஏராளமான காளைகள் பங்கேற்கும். ஜல்லிக்கட்டு  போட்டியில்  பங்கேற்கும் காளைகளை பரிசோதிக்க கால்நடை மருத்துவர் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டை காண பல்வேறு நாடுகளில் இருந்து வெளிநாட்டவர் கலந்து கொண்டு, ஜல்லிக்கட்டு கண்டு ரசிப்பர். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளுக்கு சிறப்பு பரிசும், காளைகளை அடக்கும் வீரர்களுக்கு சிறப்பு பரிசுகளும்  ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது .அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை வெளிநாட்டவர் கண்டு களிக்கும் வகையில் மேடைகள் அமைக்கப்படுகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top