Close
அக்டோபர் 5, 2024 10:28 மணி

புதுக்கோட்டையில் இலவச தற்காப்புக் கலை பயிற்சி பயிற்சிபெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கல்

புதக்கோட்டை

புதுக்கோட்டையில் இலவச தற்காப்பு கலை பயிற்சி முகாம் நிறைவு , பயிற்சிபெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது

புதுக்கோட்டை  சம்ஸ்கிருத வித்யாலயா ஓரியண்டல் உயர்நிலைப்பள்ளியில் இலவச தற்காப்பு கலை பயிற்சி முகாம் நிறைவுவிழா, சான்றிதழ் வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது.

 நேரு யுவ கேந்திரா, மாவட்டகுழந்தைகள் நலக் குழுமம்,  சிட்டி ரோட்டரி சங்கம்,செஞ்சுரி லயன்ஸ் சங்கம்,ஆகிய அமைப்புகள் இணைந்து பயிற்சி பெற்ற  மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி  நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்ட குத்துச்சண்டை கழக தலைவர் எஸ் வி .எஸ். ஜெயக்குமார் தலைமை வகித்தார்.புத்தாஸ் இளைஞர் நலன் (ம) விளையாட்டு மேம்பாட்டு அறக்கட்டளை யின்தலைவர் சேது கார்த்திகேயன் விழா நோக்க உரையாற்றினார்.

சிறப்பு விருந்தினராக  ராஜ்குமார் விஜயகுமார் தொண்டைமான், கார்த்திக் தொண்டைமான், சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் முத்துராஜா, நகர் மன்ற தலைவர் திலகவதி செந்தில் ஆகியோர் கலந்து கொண்டு தற்காப்பு கலை பயிற்சி பெற்ற  மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கி வாழ்த்தினர்.

புதுக்கோட்டை
தற்காப்புக்கலை பயிற்சி செய்யும் மாணவர்கள

நிகழ்வில், நாட்டு நல பணித்திட்ட மாநில ஆலோசனைக் குழு உறுப்பினர் நைனா முகமது, நகர்மன்ற உறுப்பினர்கள் சுபசரவணன், நகர்மன்ற உறுப்பினர் செந்தாமரை பாலு, ஆலோசகர் அனுராதா ஸ்ரீனிவாசன்.

நேரு யுவ கேந்திரா உதவி திட்ட அலுவலர் நமச்சிவாயம்,  மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் கே. சதாசிவம், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்க தலைவர் மாருதி கண மோகன்ராஜ், சிட்டி ரோட்டரி சங்கத் தலைவர் அசோகன், தக்க்ஷிணாஸ் மார்ஷியல் ஆர்ட்ஸ் நிறுவனர் பாலசுப்ரமணியன்.

புதுக்கோட்டை
விழாவில் பங்கேற்ற மாணவர்கள்

புதுக்கோட்டை செஞ்சுரி லைன் சங்கத் தலைவர் மூர்த்தி ஆகியோர் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்க செயலாளர் இப்ராஹிம்பாபு, டெல்லி பப்ளிக் பள்ளியின் செயலாளர் பார்கவி கிருஷ்ணன், திருவோணம் அரசு மேல்நிலைப் பள்ளியின் உடற்கல்வி இயக்குனர் கந்தசாமி.

காவிரி நகர் அரசு மேல்நிலைப் பள்ளியின் உடற்கல்வி இயக்குனர் காசி ராஜேந்திரன், சமூக ஆர்வலர் சபாரத்தினம், புத்தாஸ் வீர கலைகள் கழக பொருளாளர், ஜான்சிராணி , ஆத்மா யோகா பாண்டியன், மரம் மரம் ராஜா   பள்ளியின் ஆசிரியர்கள்,  மாணவர்கள், பெற்றோர்கள் விழாவில் ஆகியோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக சம்ஸ்கிருத வித்யாலயா ஓரியண்டல் பள்ளியின் தலைமை ஆசிரியர் சேகர் வரவேற்றார். பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் முத்துராமலிங்கம் நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top