Close
நவம்பர் 22, 2024 11:21 காலை

பூதலூர் தாலுகாவை வறட்சி பாதித்த பகுதியாக அறிவிக்கக்கோரி ஜனவரி 8 ல் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர்

பூதலூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு

தஞ்சாவூர். பூதலூர் தாலுகாவை வறட்சி பாதித்த பகுதியாக அறிவித்து  ஒன்றிய அரசு பேரிடர் நிவாரண நிதியை முழுமையாக வழங்க வேண்டுமென வலியுறுத்தி   ஜனவரி 8 ல் பூதலூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் இந்திய கம்யூ னிஸ்ட்  கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பூதலூர் தெற்கு ஒன்றிய நிர்வாகிகள் கூட்டம் ஒன்றிய செயலாளர் இரா.முகில் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.

கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் முத்து.உத்திராபதி, துணை செயலாளர் கோ.சக்திவேல், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் இரா.இராமச்சந்திரன்,

மாவட்ட செயலாளர் சோ.பாஸ்கர்,ஒன்றிய நிர்வாகிகள் கே.மாரிமுத்து, ஜி.தங்கமணி, எம்.அய்யாராசு, எஸ்.சுப்பிரமணியன், வீ.ராமமூர்த்தி, கே.சந்திரசேகர், என்.முத்துலெட்சுமி, ஆர்.முத்துக்கண்ணு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கடந்த டிசம்பர் மாதத்தில் சென்னை உள்ளிட்ட நாலு மாவட் டங்களும் தூத்துக்குடி உள்ளிட்ட நாலு மாவட்டங்களும் புயல் மற்றும் பெருமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டன. மக்களின் இயல்பு வாழ்க்கை நிலை குலைந்து போனது.

வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் சிக்கி தவித்த மக்களை பாதுகாக்கவும், இதுவரை தமிழகம் சந்தித்த இயற்கை சீற்றப் பேரழிவை எதிர்கொள்ள பேரிடர் நிவாரண நிதி வழங்காத ஒன்றிய அரசின் அலட்சியப் போக்கைக் கண்டித்தும், தமிழ்நாடு அரசு கோரியுள்ள பேரிடர் கால உதவி நிதியை முழுமையாக வழங்க வலியுறுத்தியும்.

பூதலூர் தாலுக்காவை வறட்சி பாதித்த பகுதியாக அறிவிக்க வலியுறுத்தியும், உய்யக்கொண்டான்-கட்டளை மேட்டு வாய்க்கால் பாசன விவசாயிகளுக்கு இழப்பீடாக ஏக்கர் 1-க்கு ரூ.20 ஆயிரம் வழங்க வலியுறுத்தியும்,

எதிர்வரும்  8.01.2024 திங்கள்கிழமை பூதலூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி பூதலூர் தெற்கு ஒன்றியக்குழு சார்பில் ஆர்பாட்டம் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது. கூட்டத்தில் அனைத்து கிளைகளுக்கும் ஜனசக்தி சிறப்பிதழும், நாட்காட்டியும் அளிக்கப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top