Close
நவம்பர் 22, 2024 12:32 மணி

புத்தகம் அறிவோம்… மதம் ஒரு தேவையா…

தமிழ்நாடு

புத்தகம் அறிவோம்- மதம் ஒரு தேவையா

இப்போது ‘மதத்தால் உண்மையில் எதையாவது சாதிக்க முடியுமா?’ என்ற கேள்வி எழுகிறது. அதனால் முடியும்.

உண்மையிலேயே மதம் உணவையும் உடைகளையும் கொடுக்க முடியுமா? முடியும். கொடுக்கிறது. எப்போதும் அது கொடுத்து வந்திருக்கிறது.இதை விட எல்லையற்ற மடங்கு சிலவற்றையும் அதனால், தர முடியும். அழிவற்ற வாழ்க்கையை அது மனிதனுக்குக் கொடுக்கிறது. மனிதனுக்கு இன்றைய நிலையைக் கொடுத்தது அதுதான், இந்த மிருக மனிதனை தெய்வமாக்கப்போவதும் அதுதான். மதம் செய்யக்கூடியது இதுதான். மனித சமுதாயத்திலிருந்து மதத்தை எடுத்துவிடுங்கள், என்ன மிஞ்சும்? மிருகங்கள் நிறைந்த காடுதான்.(பக்.29).

“குருட்டு நம்பிக்கை என்ற பொருளில் எந்த நம்பிக்கையும் உண்மையான மதத்தில் கிடையாது. எந்தப் போதகரும் அப்படிப் போதித்ததில்லை. சீரழிவின் காரணமாகத்தான் இது நிகழ்கிறது. மூடர்கள் தாங்கள் யாராவது ஒரு பெரிய மகானின் சீடர்கள் என்று சொல்லிக் கொண்டு அதற்குரிய அதிகாரம் இல்லாவிட்டாலும் கூடக் கொள்கைகளை நம்பும்படி மக்களுக்கு உபதேசிக்கிறார்கள்.

எதை நம்புவது? கண்மூடித்தனமாக நம்புவது மனிதனைக் கீழ்நிலைக்கே கொண்டு செல்லும். வேண்டுமானால் நாத்திகர்களாக இருங்கள். ஆனால் கேள்வி கேட்காமல் எதையும் நம்பாதீர்கள்.ஏன் உங்களை மிருக நிலைக்கு இழிவுபடுத்த வேண்டும்.? அதனால் நீங்கள் உங்களை மட்டும் கெடுத்துக் கொள்ளவில்லை, சமுதாயத்தையும் கெடுக்கிறீர் கள். உங்கள் பின்னால் வரப்போகிறவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறீர்கள்.

எழுந்து நில்லுங்கள், பகுத்தறிவுடன் பாருங்கள். கண்மூடித்தன மாக எதையும் நம்பாதீர்கள். நம்புவதல்ல மதம், மதம் என்பது இருப்பதும், ஆவதும் அது தான் மதம். அந்த நிலையை அடைந்தால்தான் உங்களுக்கு மத உணர்வு இருக்கிறது என்று பொருள். அதற்கு முன்பு நீங்கள் மிருகங்களை விட எந்தவிதத்திலும் உயர்ந்தவர்கள் அல்ல.

புத்தர் பெருமான் கூறியது போல்,’நீங்கள் கேட்டதை நம்பாதீர் கள், தலைமுறை தலைமுறையாக உங்களிடம் வந்த கொள்கைகள் என்பதற்காக நம்பாதீர்கள், பலர்கண்மூடித்தன மாகப் பின்பற்றுகிறார்கள் என்பதற்காக நம்பாதீர்கள்.

யாரோ ஒரு மகான் சொன்னார் என்பதற்காக நம்பாதீர்கள். பழக்கத்தால் பிடித்துப் போனவை என்பதற்காக நம்பாதீர்கள். உங்கள் ஆச்சாரியர்களும் பெரியவர்களும் சொல்கிறார்கள் என்பதற்காக நம்பாதீர்கள். சிந்தித்துப் பாருங்கள், சீர்தூக்கிப் பாருங்கள், அதனால் வருகின்ற முடிவு பகுத்தறிவுக்கு ஒத்ததாக இருக்குமானால், அது எல்லோருக்கும் நன்மை பயக்குமானால் அதை ஏற்றுக் கொள்ளுங்கள்.அதன்படிச் செல்லுங்கள்.(பக்.53 – 56).

இன்றைய இந்தியாவில் பெருத்துப்போயுள்ள சாமியார் கூட்டத்தைக் கணக்கில் கொண்டு பார்த்தோமானால் விவேகானந்தரின் கூற்றின் உண்மை புலப்படும்.

சுவாமி விவேகானந்தர், நியுயார்க்கில் 1896 ஜனவரி 5 ஆம் நாள் The claims of Religion என்ற பெயரில் ஆற்றிய சொற்பொழிவின் தமிழாக்கமே “மதம் ஒரு தேவையா?” என்ற இந்த சிறு நூல்.ஸ்ரீராமகிருஷ்ண மடம்வெளியீடு. ரூ.15.

# சா.விஸ்வநாதன்- வாசகர் பேரவை- புதுக்கோட்டை #

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top