Close
மே 14, 2024 2:58 காலை

தொழிற்கல்விப் பிரிவு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை அரசு முன்மாதிரிப்பள்ளியில் நடைபெற்ற பயிற்சி முகாம்

புதுக்கோட்டை அரசு முன்மாதிரிப் பள்ளியில், பதினொன்று , பனிரெண்டாம் வகுப்பில், தொழிற்கல்வி பயிலும் மாணவர்களுக்கு, தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி, தேர்ச்சி பெற்ற விரிவுரையாளர்களைக் கொண்டு ஐந்து நாள் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டது.

சிறப்பு வகுப்புகளை பள்ளி முதல்வர் வெ. சிவப்பிரகாசம் தொடங்கிவைத்தார்.

வேளாண் பிரிவு மாணவர்களுக்கு, மீன் வளர்ப்பு, கால்நடை வளர்ப்பு, காளான் வளர்ப்பு குறித்தும், அதன்மூலம் கிடைக்கும் பொருளாதார பயன்பாடு குறித்தும் டாக்டர் ஏ.பரமசிவம் உரையாற்றினார்.

அடிப்படைக் கணினி மென்பொருள் பயன்பாடு குறித்து முத்துக் கிருஷ்ணன் சிறப்புரை வழங்கினார்.இதேபோல் அடிப்படை மின்னணுவியல் பிரிவு மாணவர்களுக்கு மடிக்கணினி பழுதுபார்த்தல் மேசைக்கணினி பழுதுபார்த்தல் ஆகியவை குறித்து பிலிப் உமாசங்கர் மற்றும் சதிஷ் குமார் பயிற்சியளித்தனர்.

அதே போன்று வங்கிக் கணக்குகள், வங்கிப் பரிவர்த்தனை கள், பான் கார்டு வண்ணப்பித்தல் போன்றவற்றிற்கும் லெனின் விக்னேஷ் பயிற்சி அளித்தார்.

நிகழ்ச்சி ஏற்பாட்டினை தொழிற்கல்வி ஆசிரியர்கள் சிவகாமசுந்தரி, பாரதி, சிரில் ஆரோக்கிய பிரபு மற்றும் பிரியங்கா ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top