Close
நவம்பர் 22, 2024 3:03 காலை

வேலை நிறுத்தப்போராட்டத்துக்கு தீர்வு காண முதல்வர் தலையிட வேண்டும்

தஞ்சாவூர்

தஞ்சாவூர் ஜெபமாலைபுரம் நகர கிளை முன்பு நடைபெற்ற வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம்

போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் தலையிட்டு தீர்வு காண வேண்டுமென போக்குவரத்துக்கழக தொழில்சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.

போக்குவரத்து கழகத் தொழிலாளர்களின் 15 வது ஊதிய ஒப்பந்தம், பழைய ஓய்வூதிய திட்டம், ஓய்வு பெற்றவர்களின் 102 மாத கால அகவிலைப்படி உயர்வு, ஓட்டுனர் நடத்துனர் தொழில்நுட்ப பணியாளர் உள்ளிட்ட 30,000  காலிப் பணியி டங்கள் நிரப்புதல், வாரிசு பணி, போக்குவரத்துக் கழகங்க ளுக்கு உரிய நிதி, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப் படுத்துதல் உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கை களில் அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை மற்றும் தொழிலாளர் துணை ஆணையருடன் நடைபெற்ற பேச்சு வார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்தது.

இதை தொடர்ந்து இன்று 9 -ஆம் தேதி தஞ்சாவூர் ஜெபமாலை புரம் நகர கிளை முன்பு அதிகாலை நாலு மணி முதல் வேலை நிறுத்தம் நடைபெற்றது. இதை தொடர்ந்து ஆர்ப்பாட்டங்க ளும் தொடர்ந்து நடைபெற்று இந்த வேலை நிறுத்தத்திற்கு சிஐடியூ மத்திய சங்க பொருளாளர் எஸ்.ராமசாமி , ஏ ஐ டி யு சி பொதுச் செயலாளர் எஸ். தாமரைச்செல்வன், அண்ணா தொழிற் சங்க பொதுச் செயலாளர் ஆர்.நீலகண்டன், டிஎம்சி தொழிற்சங்க தலைவர் ஆர்.சுப்பிரமணியன், டி எம் எம் கே சங்க தலைவர் அறிவழகன் உள்ளிட்டோர் தலைமை வகித்தனர்.

வேலை நிறுத்தத்தில் ஏஐடியுசி மாநில துணைத்தலைவர் துரை.மதிவாணன், மத்திய சங்கத் தலைவர் நா.சேகர்,சிஐடியு நிர்வாகி முருகசக்தி, அதிகாரிகள் நலச்சங்க நிர்வாகி. ஜெ.சந்திரமோகன், பொறியாளர் சங்க நிர்வாகி ரவீந்திரன், ஓய்வு பெற்றோர் நல சங்க தலைவர் ஏ.கணேசன், ஏஐடியூசி ஓய்வு பெற்றோர் சங்க பொதுச் செயலாளர் பி.அப்பாத்துரை, அண்ணா தொழிற்சங்க நிர்வாகி ஞானசம்பந்தம் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினார்கள்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து சங்க நிர்வாகிகள் கஸ்தூரி, சுந்தர பாண்டியன், தங்கராசு, வெங்கடேசன், முருகானந்தம் ,வீரமுத்து, ஜெயக்குமார், கவியரசன்,கார்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த வேலை நிறுத்த ஆர்ப்பாட்டத்தில் பொங்கல் பண்டிகை விரைவில் வருவதால் பொதுமக்கள் மற்றும் தொழிலாளர் களின் நலனை முன்னிட்டு தமிழ்நாடு முதல்வர் போக்குவ ரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்த கோரிக்கைகளில் தலையிட்டு உடனடி தீர்வு காண வேண்டுகோள் வைக்கப் பட்டது.

கரந்தை புறநகர் கிளையில் நடைபெற்ற வேலை நிறுத்தத்திற்கு சிஐடியு மத்திய சங்கத் தலைவர் காரல் மார்க்ஸ் தலைமை வகித்தார். கும்பகோணம் கழகத்தில் தஞ்சாவூர், கும்பகோணம், திருவையாறு, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி உள்ளிட்ட 10 பணிமனைகளில் 50 சதவீதமான பேருந்துகளை காலை நாலு மணி முதல் 10 மணி வரை இயக்கப்பட்டது.

தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில் காலை 11 மணிக்கு அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாவட்ட நிர்வாகிகள் சி.ஜெயபால், ஆர்.மனோகரன், ஏஐடியூசி மாவட்ட நிர்வாகிகள் ஆர்.தில்லைவனம், தி.கோவிந்தராஜன், வெ.சேவையா.

 அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்க மாநில நிர்வாகி தமிழ்ச்செல்வி, ஐக்கிய விவசாயிகள் முன்னணி ஒருங்கி ணைப்பாளர் கண்ணன், மின்வாரிய ஊழியர் சங்க மாநில துணைத் தலைவர் ராஜாராம், அரசு ஊழியர் சங்க மாநில துணைச் செயலாளர் கோதண்டபாணி,

மருந்து விற்பனையாளர் சங்க மாநிலச் செயலாளர் பாலமுருகன், ஐஎன்டியூசி மாவட்ட செயலாளர் மோகன்ராஜ், பி எம் எஸ் போக்குவரத்து சங்க நிர்வாகி முருகேசன், கண்காணிப்பாளர் சங்க நிர்வாகி பாலசுப்பிரமணியன், எஸ் சி எஸ் டி தொழிற்சங்க தலைவர் ஆதி சிவகுமார்.

அண்ணா தொழிற்சங்க மாவட்ட நிர்வாகி இளங்கோவன் ,அரசு விரைவு போக்குவரத்துக் கழக சிஐடியு மாநில துணைச் செயலாளர் வெங்கடேசன்,அண்ணா தொழிற்சங்க ரமேஷ், ரிவா சங்க பாஸ்கரன், ஞானசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top