Close
நவம்பர் 24, 2024 11:49 மணி

அதிராம்பட்டினத்தில் அரசு நிலம் மீட்கப்பட்ட விவகாரம்: சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவோருக்கு பேரூராட்சி நிர்வாகம் எச்சரிக்கை

தஞ்சாவூர்

அதிராம்பட்டினம் பேரூராட்சி அறிவிப்பு

அதிராம்பட்டினத்தில் அரசு நிலம் மீட்கப்பட்ட விவகாரத்தில் உண்மைக்கு மாறாக சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவோர் மீது  கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பேரூராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு சொந்தமான புல எண்.313/2 ல் 0.21.0 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட இடத்தில் ஆரம்ப கட்டத்தில் அருள்மிகு வரம் தரும் விநாயகர் கோவிலுக்கு சொந்தமான இடமாக இருந்தது. நிலகையகப்படுத்தும் சட்டத்தின் கீழ் நிலஎடுப்பு செய்து பேரூராட்சி மூலம் பராமரிக்கப்பட்டு, பொதுமக்கள் நலனுக்காக, 1946 முதல் ஹசன் வானொலி பூங்காவாக பயன்படுத்தப்பட்டது.

இந்நேர்வில், மேற்காணும் இடத்தில் இமாம்ஷாபி மெட்ரிகுலேசன் பள்ளி நிர்வாகத்தினரால் ஆண்டுக்குரூ. 300/- தொகை செலுத்தி 3 ஆண்டிற்கு குத்தகை எடுக்கப்பட்டு, 1978ஆம் ஆண்டில் குத்தகை காலம் முடிவுற்ற நிலையில், மேற்படி நிர்வாகத்தினரால் இடத்தினை காலிசெய்யாமல் தொடர்ந்து பள்ளி நிர்வாகம் பயன்படுத்தியதால், பேரூராட்சி நிர்வாகத்தினரால் பட்டுக்கோட்டை முன்சிப் நீதிமன்றத்தில்  வழக்கு தொடரப்பட்டு பேரூராட்சி வசம் மேற்படி இடத்தினை ஒப்படைப்பு செய்ய தீர்ப்பு வழங்கப்பட்டும், பள்ளி நிர்வாகம் தொடர்ந்து மேல்முறையீடு செய்யப்பட்டதில் பேரூராட்சிக்கு ஆதரவாகவே பல்வேறு தீர்ப்புகள் நீதிமன்றத்தால் வழங்கப்பட்டது.

இறுதியாக உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் கொண்ட அமர்வில் மதுரை கிளையில் செய்த மேல்முறையீட்டு வழக்கு 21. 11. 2023 அன்று தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில் அதிராம்பட்டினம் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் நகராட்சியின் பல்வேறு வளர்ச்சி பணிகளான மருத்துவ சுகாதார நிலையம், அறிவுசார் நூலகம் அமைத்தல், பூங்கா அமைத்தல் பணிகளுக்கு போதிய இடம் இல்லாததால் நகராட்சியின்வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் அதிராம்பட்டினம் நகராட்சிக்கு சொந்தமான வேறுஇடங்கள் ஏதும்இல்லாத நிலையில் மேற்படிஇடம்ந கராட்சிக்கு அத்தியாவசிய தேவையாக உள்ளது.
மேற்படி புல எண்.311/2, 0.52 ஏக்கர் (22651 சதுரடி) பரப்பு வானொலி பூங்கா என்ற வகைபாட்டில் அமைந்துள்ளது. மேற்படி இடத்தின் அரசு வழிகாட்டி மதிப்பின்படி சதுரடி ஒன்று ரூ.300 ஆகும். அதனடிப்படையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலத்தின் மதிப்பானது ரூ. 67,95,300/- ஆகும்.

அவ்விடத்தில் நிலவும் தற்கால சந்தை மதிப்பின் அடிப்படையில் மேற்கண்ட நிலமானது சதுரடி ஒன்று ரூ.3000 ஆகும். அதன்படி ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலத்தின் மதிப்பானது ரூ. 6,79,53,000/- இந்நேர்வில் இமாம்ஷாபி பள்ளியானது புல எண்கள் 245/2 உள்பட 8 வரையிலான புலஎண்களில் செயல்பட்டு கொண்டிருக்கிறது. புல எண்.313/2ல் பள்ளி ஸிசிசி கட்டுமானம் ஏதுமின்றி தற்காலி கமாக ஆஸ்பெட்டாஸ் சீட்டுடன் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு பள்ளி நிர்வாகத்தின் பயன்பாட்டில் இருந்து வந்தது.

குத்தகை உரிமையை நீட்டித்து ஆணையிடாத நிலையில் மேற்படி குத்தகைதாரர் இடத்தினை நகராட்சி வசம் ஒப்படைக்காமல் சட்டத்திற்கு புறம்பாக குத்தகை தொகை ஏதும் செலுத்தாமலும் குத்தகை நீட்டிப்பு செய்யாமலும் நகராட்சிக்கு நிதி இழப்பு ஏற்படுத்தி தணிக்கை தடை எழுப்பு வதற்கும் காரணமாக ஆக்கிரமிப்பு செய்து வைத்துள்ள தனை 11. 01. 2024 அன்று ஆக்கிரமிப்பினை அகற்றி மேற்படி இடத்தை பூட்டி சீல் வைத்து நகராட்சி வசம் கொண்டு வரப்பட்டது.

மேலும் ,அதிராம்பட்டினம் எஜுகேசனல் டிரஸ்ட்டின் செயலாளர்  மேற்படி நகராட்சியின் நடவடிக்கைக்கு இடைக்கால தடையாணை கோரி 12.11.2023 அன்று நீதியரசர்கள் டி.கிருஷ்ணகுமார் மற்றும் ர்.விஜயகுமார் ஆகியோர் உள்ளடக்கிய டிவிசன் பென்ஞ் முன்பு விசாரணைக்கு வரப்பெற்ற போது மேற்படி தடையாணை கோரும் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

மேற்கண்ட உண்மை செய்திக்கு  புறம்பாக தவறான தகவல் களை பரப்பி அரசுக்கும், நகராட்சி நிர்வாகத்திற்கும் அவப் பெயர் ஏற்படுத்திடும் வகையில்  சமூக வலைதளங் களில் பரப்புரை செய்யும் நபர்களின் மீது சட்டப்படி குற்ற நடவடிக் கை எடுக்கப்படும் என அதிராம்பட்டினம்நகராட்சி ஆணையர் த.சித்ராசோனியா  தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top