Close
நவம்பர் 22, 2024 6:06 காலை

தொடக்கக் கல்வித் துறையில் மாநில அளவிலான மூதூரிமை பட்டியல் கடைபிடிக்கப்படும் என அறிவித்த முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த ஆசிரியர் முன்னேற்ற சங்கம்

புதுக்கோட்டை

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க கூட்டத்தில் பேசுகிறார், மாநில ஒருங்கிணைப்பாளர் ஆ.மணிகண்டன்

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் தொடக்கக் கல்வித் துறையில் மாநில அளவிலான மூதூரிமை பட்டியல் கடைபிடிக்கப்படும் என அறிவித்த  தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலினுக்கு  நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் சந்தைப்பேட்டை நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில ஒருங்கிணைப்பாளர் ஆ.மணிகண்டன் தலைமை வகித்தார்.

மாவட்ட தலைவர்எம் ராஜாங்கம் ஒருங்கிணைத்தார். மாநில செயற்குழு உறுப்பினர்கள் ஜெகதீஷ், முகேஷ் தயாளன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாவட்டச் செயலாளர் மூ.நாயகம் அனைவரையும் வரவேற்றார்.

சங்க கூட்டத்தில் 2024 -ஆம் ஆண்டு உறுப்பினர் சேர்க்கை சிறப்பாக நடத்துவது எனவும், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் கு.தியாகராஜன் அவர்களின் வழிகாட்டுதலின்படி நாட்காட்டி வெளியிடப்பட்டு அனைத்து உறுப்பினர்களையும் சேர்க்க வேண்டும் என ஆலோசனை செய்யப்பட்டது.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
.தொடக்கக் கல்வித் துறையில் நீண்ட நாட்களாக ஏற்பட்டு வந்த குளறுபடிகளை நீக்கி தற்போது சமூக நீதிக்கான அரசாணை எண் 243 வெளியிட்ட  தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி  ஆகியோருக்கு  நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். முடக்கி வைக்கப்பட்ட சரண்டர் விடுப்பு மீண்டும் வழங்க வேண்டும் .

காலை உணவு திட்டத்தை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு விரிவு படுத்திய  தமிழ்நாடு முதல்வருக்கு  நன்றி தெரிவிப்பது.

பள்ளிக்கல்வித்துறையில் இல்லம் தேடி கல்வித் திட்டம், நான் முதல்வன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவிப்பது.

தொடக்க கல்வித்துறையில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுகலை பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பள்ளிக்கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர்கள் கல்லூரி உதவி பேராசிரியர் தகுதி பெற்றிருந்தால் கல்லூரியில் உதவி பேராசிரியர் பணி அமர்த்த வேண்டும் .

மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் பதினொன்று மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கும் சத்துணவு திட்டத்தை விரிவுபடுத்தி கலைஞர் விரிவுபடுத்தப் பட்ட சத்துணவு திட்டம் என பெயர் சூட்ட வேண்டும்.

மாணவர்களுக்கான உயர்கல்வி இட ஒதுக்கீட்டை7. 5% சதவீதத்திலிருந்து 10% ஆக உயர்த்திட நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம். அலகு விட்டு அலகு மாறுதல் பெற்ற ஆசிரியர்களின் பதவி உயர்வு மூதுரிமையை ஆசிரியர் தேர்வு வாரிய தர எண் அடிப்படையில் முறைமைப்படுத்திட வேண்டுதல் என்பன உள்ளிட்ட  பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்நிகழ்வில் மாவட்ட அமைப்புச் செயலாளர் முத்துக்குமார், செய்தித் தொடர்பாளர் ரகமதுல்லா, கல்வி மாவட்ட பொறுப்பாளர்கள் ஜெகதீஷ்,  பாபுசிவராம், சுப்பிரமணியன், சீ.செந்தில்குமார், ஆ.கலையரசன், கோ.சரவணன், வி.கோவிந்தராஜன், பால்ராஜ்,

பழனிச்சாமி, ஜோதிபாசு முருகராஜ், அமுல்துரை, நாகப்பன், பழனிச்சாமி, ரவீந்திரன்,சுரேஷ், வெள்ளைச்சாமி, கல்யாண ராமன்,வீரமணி, ஷியாம் சுந்தர், சரவணன், ஸ்டான்லி, மாணிக்கம், சரவணன் பெருமாள் ராஜேந்திரன், ரவி,செல்வம்  உள்ளிட்ட மாநில மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.நிறைவாக பொருளாளர் செந்தில்குமார் நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top