Close
நவம்பர் 22, 2024 1:12 காலை

புதுக்கோட்டையை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும்: இந்திய விவசாயிகள் சங்கம் கோரிக்கை

புதுக்கோட்டை

ஜி.எஸ்.தனபதி

புதுக்கோட்டையை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டுமென புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற  விவசாயிகள் குறை தீர்க்கும் நாள்  கூட்டத்தில் இந்திய விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த ஆண்டு பல மாவட்டங்களில் பருவமழை அதிகமாக பெய்தாலும், நமது மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை மிக குறைவாக பெய்துள்ளதால விவசாயம் பொய்த்துவிட்டது எனவே வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும்.

மாவட்டம் முழுவதிலும் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி கிட்டங்கிகளில் விவசாயிகள் தங்கள் விளைபொருளை கொண்டு சென்று இருப்பு வைப்பதற்காக கட்டப்பட்டுள்ள கிட்டங்களில் வங்கிகளின் பழைய சாக்குகள் மற்றும் தளவாடங்கள் போட்டு வைத்துள்ளார்கள். குறிப்பாக (விராலிமலை வேலூர் PACB ல் 4 ஆண்டுகளாக உள்ளது.) அவைகளை எடுத்து விட்டு அறுவடை காலத்தில் நெல் பாதுகாக்கும் கிடங்குகளாக மாற்ற வேண்டும்.

தஞ்சாவூர் மாவட்டத்தைப் போல நமது மாவட்டத்திலும், மழை அளவு மற்றும் சாகுபடி விவரம் மற்றும் பல தகவல்களை மக்கள் தெரிந்து கொள்ள புள்ளியியல் துறை  மூலம் அறிக்கை புத்தகமாக வெளியிட வேண்டும்.

விவசாய நிலங்களில் குறங்கு, மயில், காட்டுப் பன்றி, மான், முயல் போன்றவை விளைந்த நெல், சிறு தானியங்கள் நிலக்கடலை முதல், தென்னை மாமரங்கள் வாழை உட்பட அனைத்தும் சேதப்படுத்துகிறது இவைகளை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,

நிலத்தடி நீரை மட்டுமே நம்பி சாகுபடி செய்வதால் பல பகுதிகளில் அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது மேலும் தடையில்லாத மும்முனை மின்சாரம் கூடுதலாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை இந்திய விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் ஜி.எஸ். தனபதி,   விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வலியுறுத்தினார்.

,

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top